Thursday, 21 November 2019

காதலில் ரசிக்க விஷயங்களா இல்லை !?

அவள் அழகி அவள் , சற்றே உயரம் தாழ்வானவள் , நானோ கொஞ்சம் உயரம் தான் , என்னை பார்த்தவர்களுக்கு தெரியும் . 
அவளோ வாய்க்குள்ளே பேசூம் தன்மையுள்ளவள் . பல நேரங்கள் நாங்கள் ஒன்றாக நடந்து செல்லுகையில் அவள் பேசுவது எனக்கு சரியாக கேட்காது . நான் என் தலையை அவள் பக்கம் வளைத்து குனிந்தவாறே அவள் பேசுவதை கேட்டுக்கொண்டும் ரசித்து கொண்டும் செல்வேன் . 
இது ஒரு பேச்சுக்கு " உன் பக்கம் இழுத்துட்ட " என்று சொல்வது போல் , அவள் பக்கம் என்னை சாய்க்கிறாள் . 😅💙. காதலில் ரசிக்க விஷயங்களா இல்லை !? .

Tuesday, 12 November 2019

அன்புள்ள அப்பா




அன்புள்ள அப்பா 

நான் காலேஜ்க்கு என் அப்பாவிற்க்கு முக்கிய வேலை இல்லாத சமயம் அவரது பைக் அவ்வப்போது எடுத்து கொண்டு போவதுண்டு , அவருக்கு முக்கிய வேலை இருக்கும் சமயம் பஸ்ல் போவேன் .
இன்று காலேஜ் விடுமுறை , நான் வீட்டில் தான் இருந்தேன் , என் அப்பாவிற்க்கும் வேறு முக்கிய வேலை இல்லை , அவர் அவரது பட்றை மட்டும் செல்லனும் அதனால் அவர் சொன்னர் " என்ன இறக்கி விட்டுட்டு நீ வண்டி வேணா வச்சுக்கோ " என்று .
பின்பு நான் இறக்கி விட சென்றேன் , இறக்கி விட்ட பி்ன்பு அவர் ரோடு க்ராஸ் பண்ணி உள்ளே சென்றார் . அப்போது நண்பன் க்ரகாம் எனக்கு போன் பண்ணிருந்தான் . நான் அவனிடம் ஒரு 2 நிமிடம் ரோட்டில் ஓரமாக நின்றவாறே பேசி கொண்டிருந்தேன் .
அப்போது என் அப்பா ரோடு கராஸ் பண்ணி என்னிடம் வந்தார் , பின்பு ₹50 கொடுத்து விட்டு " செலவுக்கு வச்சுக்கோ " என்று சொல்லிவிட்டு திரும்ப சென்றார் .
எனக்கு அது ஒரு புது உணர்வாக இருந்தது . இதுவரை பல முறை பணம் வாங்கி இருக்கிறேன் . ஆனால் இது போல் அவர் கொடுத்ததில்லை .
நல்ல சமயத்தில் க்ரகாம் கால் செய்தான் , இல்லாவிட்டால் அவர் திரும்பி வரும் முன்னே நான் சென்றிருப்பேன் .
என்ன இருந்தாலும் அப்பா , அப்பா தான் . அவர் பணக்காரர் , ஏலை , அன்புமிக்கவர் , அன்பில்லாதவர் என எந்த நிலையில் இருந்தாலும் . அப்பா என்ற ஒரு மனிதன் இருப்பது நமக்கு துணையாய் இமயம் இருப்பதுக்கு சமமாகும் . ஏன் என்றால் அவர் உங்களுக்கு பிடிக்காமல் கூட இருந்தாலும் , ஒரு கட்டத்தில் அவரை நீங்கள் புரிந்து கொள்ளும் போது உங்களால் அவர் மீது மரியாதை வைக்காமல் இருக்க முடியாது .
#Dadthesuperhero

எழுத்து - அரவிந்த் மாணிக்கம் .