மகேந்திரன் sir இயக்கி , ரஜினி காந்த் மற்றும் ஶ்ரீதேவி நடிப்பில் , இளையராஜா அவர்களது இசையில் , கவிஞர் கண்ணதாசன் எழுதி , "ஜானி" படத்தில் இடம் பெற்றுள்ள "என் வானிலே ஒரே வெண்ணிலா " பாடலை இப்போதெல்லாம் கேட்க்கும் போது ஒரு நிகழ்வு நினைவிற்க்கு வருகிறது .
நான் சில மாதங்களுக்கு முன்பு சகோதரர் ஒருவரின் உறவினருக்கு இரத்த தானம் செய்ய , கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் .
அப்போது வேண்டிய test எல்லாம் எடுத்து விட்டு , இரத்தம் எடுக்க ஆரம்பித்தார்கள் , எனக்கு ஒரு கல்யாணம் ஆகாத நடு வயது Nurse தான் ஊசி குத்தி வேண்டியவை செய்து கொண்டிருந்தார் , தனி அரை யாருமில்லை . அவர் சற்று உர்ர்ர் என்றே முக பாவணையிலே தான் இருந்தார் சிரிக்க கூட இல்லை , நானும் பெரிதாக கண்டுக்கவில்லை . பின்பு கையில் smiley ball குடுத்து விட்டு " pump பண்ணுங்க " என்று கூறி உள்ளே மற்றோரு அரைக்கு சென்று விட்டார் . நானும் படுத்தாவறு ballஐ pump பண்ணி கொண்டிருந்தேன் .
அந்த மற்றோரு அரையிளிருந்து இந்த பாடல் (என் வானிலே ஒரே வெண்ணிலா) மென்மையான குரலில் ஒளிக்க தொடங்கியது . நானும் நன்கு கவணித்தேன். கிட்ட தட்ட 30 - 40 வீனாடிகள் பாடி முடித்தவுடன். அந்த Nurse திரும்பவும் நான் இருக்கும் அறைக்கு வந்தார் , அப்போதும் அந்த உர்ர்ர்ர் முக பாவணை தான்.
திரும்ப அந்த அறைக்கு சென்றார் , மறுபடியும் பாடல் ஒளித்தது . இப்போதும் அதே போல் ஒரு 30 - 40 வீனாடி பாடி முடித்த பின் திரும்ப என் அறைக்கு வந்தார் அந்த Nurse. நான் இருக்கும் அறையில் அவர் பாடவில்லை.
என் அறைக்கு வந்ததும், "sister அந்த பாட்டு யார் பாடுனாங்க?" என்று கேட்டேன் . அவர் "நான் தான்" என்றார்." உங்க voice நல்ல இருக்கு" என்று கூறினேன் உண்மையில் பல பின்னனி பாடலர்களில் சில பின்னனி பாடலர்களை விட நன்றாக தான் இருந்தது அவர்களது குறள் .
நான் "உங்க voice நல்ல இருக்கு" என்று கூறிய பின்பு உர்ர்ர்ர் என்ற அவர்களது முகம் சிறிது மலர்ந்தது . அப்போது அவர் கூறினார் "Hospital la Evening competition இருக்கு , அதான் practice பண்ணிட்டு இருக்கேன்" என்றார் , நான் சொன்னேன் "கண்டிப்பா உங்களுக்கு prize கிடைக்கும் , all the best" என்று. அதற்கு அவர்கள் புன்னகை செய்தார்.
இவ்வாறு பலர் பலரது வேலைகளால் சோர்ந்து இருக்கும் போது ஒருவரது சிறு புன்னகையோ அல்லது சிறு அன்பான வார்த்தை கூட அவர்களின் அந்த மொத்த சோர்வையும் போக்கி விடுகிறது.
சமிபத்தில் Helen என்ற ஒரு மலையாளா திரைப்படத்தில் climax காட்சியில் , ஒரு Watch man பெரியவர் , ஒரு செய்தி கூறுவார் (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) அதை போல ஒருவருக்கு நாம் சிரித்த வாறு கூறும் simple good morning கூட பலருக்கு புத்துணர்வு தருகிறது.