அன்று ஒரு அழகிய மாலைப்பொழுது.
கல்லூரி மூன்றாம் ஆண்டு முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன ஜீவாவிற்கு வேலைக்கு போக ஏற்றவாறு சில துணிமணிகள் வாங்க ஜீவாவின் தந்தை அழைத்துச் சென்றார்.
ஜீவாவின் தந்தை பெயர் ரங்கராஜ், ஆல் நல்ல ஆறு அடி உயரம் , முறுக்கு மீசை , கனத்த உருவம் என கம்பீரமான தோற்றம் . ஒரு நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டரும் அல்லாது செக்யூரிட்டியும் அல்லாது இரண்டிற்கும் நடுவே ஆன ஹோட்டலிற்கு வருபவர்களுக்கு கதவு திறந்துவிடும் பணி . பெரும்பாலுமான நட்சத்திர ஹோட்டலில் இதை போன்ற நபர்கள் இருப்பார்கள் . சென்றவர்களுக்கு அறியலாம். மாதம் ரூபாய் 12,000 சம்பளம் . வரும் நபர்கள் தரும் பேட்டா பொருத்து ரூபாய் 15,000 முதல் 16,000 மாதம் கிட்டும் . மிடில் கிளாஸ் குடும்பம் , சேமிப்பு பெரியதாக எதுவும் இல்லை . குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த சிறு சேமிப்பை ஜீவாவின் படிப்பில் மொத்தமாக செலவிட்டு விட்டார் . ஒரு நார்மலான குடும்பம் அம்மா , அப்பா , ஜீவா , மற்றும் அவனது தங்கை என நான்கு பேர் .
ஜீவா அவர்களது வீட்டிற்கு வெளியே நிற்க , அவனது தந்தை வண்டி எடுக்க சென்றார் . பழைய மாடல் ஸ்பிளேண்டர் வண்டி . எடுக்கும் போதுதான் கவனித்தார் பெட்ரோல் யாரோ திருடி உள்ளனர் என்று.
"தம்பி இங்க வா !"
"என்னப்பா ?"
"யாரோ பெட்ரோல் திருடிடாங்க தம்பி. "
"ச்ச ! வண்டில கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெட்ரோல் கூட வைக்க விட மாட்டிக்கிறாங்க, நான் வேணா போய் பாட்டில்ல 30 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிட்டு வரவா ? "
"கடை பக்கத்துலதான் இருக்கு , வேண்டாம் விடு தம்பி நம்ம பேசிட்டே நடந்து போவோம் ரொம்ப நாளாச்சு இல்ல ஒண்ணா நடந்துபோய் ? "
"சரிப்பா !".
என்று இருவரும் சில விஷயங்களை பேசிக்கொண்டே நடையை ஆரம்பித்தனர்.
"உனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கா தம்பி ? பிடிக்காமல் செய்ய வேண்டாம் எந்த வேலையும் . "
"அதெல்லாம் இல்லப்பா ஐட்டி பீல்ட் தான் போகணும்னு ஆசை , அது கெடச்சது சந்தோசம் தான் . ஆனா என்ன நம்ம ஊர்ல ட்ரை பண்ண வேலை கிடைக்கும்னு நினைச்சேன் அதான் மிஸ் ஆயிடுச்சு , பரவால்ல பங்களூரு தானே . ஒரு வருஷம் அங்க ஒர்க் பார்த்துட்டு , வீட்டுக்கு சப்போர்ட் பண்ணிட்டு , அப்படியே இங்கே கிடைக்குமா நானும் ட்ரை பண்ணி பாக்குறேன். "
"அங்க போக பிடிக்கலையா தம்பி ?"
"அப்படி இல்லப்பா ஆனா உங்க எல்லாரையும் விட்டு அவ்வளவு தூரம் போறது தான் கஷ்டமா இருக்கு.''
" உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்றேன் தம்பி , இதுவரைக்கும் நான் உங்க அம்மா கிட்ட கூட அத சொன்னதில்லை .''
அம்மா கிட்ட கூட சொல்லாத விஷயம் என்னவாக இருக்கும் ? என ஆர்வமாக கவனித்தான் ஜீவா .
"எனக்கு நான் படிச்சிட்டு இருந்த சமயத்துல மிளிடரில சேரணும்னு ஆசை இருந்துச்சு தம்பி . நாம வேற ஆள் கொஞ்சம் ஹைட் அண்ட் வெயிட்டாக இருப்போமா , நிறைய பேர் போலீஸ் சேரலாம்ல மிளிடரில சேரலாம்லனு சொல்லுவாங்க . "
"அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன் உங்க தாத்தா சகுறப்போ . அதோட அவ்வளவுதான் என் கனவெல்லாம் , மேல படிக்கல வீட்டில் மூணு பொம்பளைங்க உங்க பாட்டியும், ரெண்டு அத்தையும் நான் ஊரை விட்டுப் வேரா வேலைக்கும் போகல , ஆம்பள இல்லாத வீடு என்ன நடக்கும் ? ஒரு பயத்திலேயே நானும் போகல குடும்ப சுமை என்மேல விழுந்துருச்சு. எப்படியோ உங்க அத்தைகளை கரை சேத்துட்டு இப்ப இந்த நிலைமையில் இருக்கோம் . "
'இவ்வளவையும் நான் ஏன் சொல்றேன்னா ? எங்கப்பா மட்டும் இருந்திருந்தா ? என்ன மிளிடரி இல்ல போலீஸ் ஆகிருப்பாரு . நான் நினைச்ச மாதிரியே அவர் இல்லாதது நாள என் வாழ்க்கையில் எவ்வளவு திருப்பம் ? .
"உனக்கு நான் இருக்கேன் தம்பி . என்ன நாலும் சொல்லு நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது".
இதைக்கேட்டு ஜீவா சற்று மௌனமாக இருந்தான் . சில நொடிகள் கழித்து அவன் அவனது அப்பாவின் மூடை ஜாலியாக ஆக்கணும் என்று எண்ணி அவன் இப்படி கேட்டான்.
"அப்போ நான் எதாவது பொண்ண காமிச்சு இவ்வள தான் லவ் பண்ணுறேன் . இவள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டா என்ன அப்பா பண்ணுவீங்க ?"
"அவனது அப்பா சிரித்தார் . காமி அவங்க வீட்டிலேயும் சம்மதிச்சா , கல்யாணம் பண்ணி வச்சுரலாம் என்றார்."
ஜீவாவின் அப்பா ரங்க ராஜோ , டெம்ப்ளேட் அப்பாகளை போல் இல்லாமல் . கொஞ்சம் பசங்களின் உணர்விற்கு நன்கு மதிப்பு தருப்பவராக இருந்தார் .
பேசி கொண்டே நடந்து வந்ததில் கடையும் வந்து விட்டது . கடைக்குள் சென்றனர் இருவரும் .
எப்போதும் ஜீவாவிற்கு ஒரு பழக்கமுண்டு, புது துணியை ட்ரயல் ரூமில் அணிந்து கொண்டு , அதை வெளியே வந்து அவனது அப்பா அம்மாவிடம் காண்பிப்பது . காண்பித்து எப்படி இருக்கு ? என்று கேட்பது . எப்பயும் அவனது ட்ரையல் ரூம் அருகே அவர்களும் காத்திருப்பார்கள்.
அதேபோல் இன்றும் அவன் புது துணியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டான் . துணியும் அணிந்து வெளியே வந்தான் ஆனால் அவனது அப்பா அங்கே நிற்கவில்லை .
சற்று வெளியே வந்து பார்த்தான் ஒரு ச்சாரில் அவனது அப்பா சோர்வாக அமர்ந்திருந்தார் .
"என்னப்பா ஆச்சு ? ஒரு மாதிரி டல்லா ஒக்காந்து இருக்கீங்க."
"இல்ல தம்பி மத்தியானம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு கேஸ் பிடிச்சிருச்சு நினைக்கிறேன் . எப்பம் வர்ற மாதிரி இருக்கு ஆனா விட முடியல "
அவன் இருங்கப்பா என்று சென்று தண்ணீர் பிடித்து குடிக்கக் கொடுத்தான்.
தண்ணீர் கொடுத்து விட்டு சட்டையை மாற்றி விட்டு வந்தான். வரும்போது நெஞ்சை பிடித்து கீழே விழுந்தார் ரங்கராஜ் , ஜீவாவுக்கு கையும் ஓடவில்லை , காலும் ஓடவில்லை . டக்கென்று அவரை தோளில் தூக்கினான் . கடையில் இருப்பவர்கள் ஆம்புலன்ஸுக்கு அழைத்தனர், மனிதநேயம் ஆங்காங்கே மிஞ்சி இருக்கத்தான் செய்கிறது . ரங்கராஜை தூக்கும் அளவிற்கு ஜீவா விற்கும் திடமான உடல் கட்டு தான் . முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வந்தவுடன் ஆம்புலன்ஸ் வந்து விட்டது ஏற்றி அவசரமாக ஆம்புலன்ஸில் சென்றனர் .
சில தூரம் சென்றவுடன் , நகரெங்கும் பாலம் கட்டுமானம் நடைபெறுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் வண்டி முக்கால் மணி நேரம் ஓரிடத்தில் நின்றது . ஜீவாவிற்கு மிகுந்த வருத்தம் கண்ணில் நீர் கசிய தொடங்கியது , பின் எப்படியோ அரசு மருத்துவமனை வந்தடைந்தது ஆம்புலன்ஸ் .
அவன் அப்பாவிற்கு நடந்தது , அவனுக்கும் நடந்துவிடுமோ என்று பயப்பட தொடங்கினான்.
ஸ்திரேச்சேரில் வைத்து உள்ளே கொண்டுசென்றனர் , அவசர சிகிச்சை பிரிவிற்கு அப்போது ஜீவா வெளியே அமைதியாக அமர்ந்திருந்தான் .
அவனுக்கு அழுகை வரவில்லை , அப்பா பற்றிய எண்ணம் அவனுக்கு ஓடவில்லை , அவன் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை சிந்திக்கத் தொடங்கினார் . அப்பா இல்லாமல் போனாலும் அந்த இடத்தில் இவன் இருந்து என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கத் தொடங்கினான் . இதுதான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது உள்ளேயும் சிகிச்சை நடைபெற்று கொண்டே இருந்தது .
சிறிது நேரம் கழித்து அவனது அம்மாவும் தங்கையும் பதறியபடி அழுது கொண்டே வந்தனர் .
ஜீவாவிற்கு அவனது அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும் . இருந்தும் அழ முடியாத நிலமையில் இருந்தான் ஜீவா .
அவன் அம்மாவைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை பொங்கியது. இருந்தும் அடக்கிக் கொண்டு அம்மாவை சமாதானம் செய்தான் ஜீவா. அவனும் அழுதாள் அம்மாவை கவனிக்க யாருமில்லை என உணர்ந்து அழுகையை அடக்கிக் கொண்டு சமாதானம் செய்தான் .
பின்பு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர் வெளியே வந்தார் ஜீவாவிற்கு பல எண்ணங்கள் ஓடத்தொடங்கியது .
அவனது அம்மாவும் தங்கையும் அழுதபடி டாக்டரை பார்க்கிறார்கள் .
அவர்களது குடும்பத்தை பார்த்தபடி டாக்டர் முன்னே வருகிறார்.
சொல்லவருகிறார் அவனது அப்பாவின் நிலைமையை.
வாயைத் திறக்கிறார் என்ன ஆயிற்று என்று சொல்ல ஜீவாவும் கூர்ந்து பார்த்தபடியே இருக்கிறான்.
முடிவு .
(இந்த கதையை நான் முடிக்கவில்லை என் என்றால் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தலாம் தவிர முடிவு செய்யும் பொறுப்பு என்னிடத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன் , இதற்கான முடிவு உங்கள் இடத்தில் விட்டு விட்டேன் . நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் , ரங்கராஜ்ஜிற்கு என்ன ஆயிற்று என்று. )
நன்றி .
அரவிந்த்
13.05.2020
நள்ளிரவு 12.29