இப்போது நான் எழுதும் இந்த பகுதி என்னுள் சில காலமாக சங்கடமாக இருந்து கொண்டே வருகிறது .
இது மனித உணர்வு சமந்த பட்ட விஷயமே .
இப்போது நாம் பார்க்கும் மனிதர்களில் 100ல் 95பேருக்கு இந்த அல்ப தனம் தன்னை அறியாமல் எதார்த்தமாக தனக்குள் இருந்து வருகிறது .
பலர் அதை அறிந்தும் மாற்றி கொள்ளாமல் இருக்கின்றனர் .
இதை எழுதும் நானும் ஒன்றும் விதிவிளக்கல்ல , பல சமயங்களில் நானும் அந்த 95 நபர்களுள் ஒருவனாக இருந்துருக்கிறேன் .
ஆனால் முடிந்த வரை அதுவாக இல்லாமல் தவிர்க்க முயற்சிக்குறேன் .
ஆம் அது தான் " நான் " " நான் " "நான் " என்றே அல்ப தனம் .
இந்த " நான் " இரண்டாக பிரிகிறது .
ஒன்று " நான் " என்னும் அகந்தை ( ஆணவம் )
மற்றொன்று " நான் " என்பது " என் " " எனது " என்ற சுயநலமாக மாறி விடுகிறது .
மிக்கேல் நைமி எழுதிய மிர்தத்தின் புத்தகத்தில் , நோவா என்பவர் ஒரு மடாலயம் அமைத்து கூறுகிறார்
" இங்கே உள்ள குருக்கள் யாரும் " நான் " என்ற வார்த்தையை தங்கள் வாயால் கூட சொல்ல கூடாது என்று "
இந்த " நான் " என்று என்னை , நான் செய்யும் வேலையை எடுத்து காட்டுவதில் தவறு ஒன்றுமில்லை என கருதுகிறேன் .
ஆனால் இது அகந்தையாகவும் , சுயநலமாகவும் மாறும் சமயம் , அதை நாமளே தவிர்பது நமக்கு நல்லது .
எடுத்து காட்டாக , இதை பலர் தன்னை அறியாமல் செய்யும் காரியங்களில் சில வற்றை குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன் .
நாம் அனைவரும் , நமக்கு ஏதாவது வேலைக்கு உதவியாக நண்பர்களை அழைத்திருப்போம் . அவர்களும் நமக்கு உதவி செய்ய கிளம்பி வந்திருப்பார்கள் . அவர்கள் வருவதற்குள் நாம் ஒரு 100 முறை call செய்திருப்போம் .
ஆனால் அந்த வேலை முடிந்ததும் , அவர்கள் safe ஆக வீட்டிற்கு சென்றார்களா இல்லையா என்று ஒரு call செய்து கூட கேட்க மாட்டோம் , பெரும்பாலும் .
சுயநலம் அங்கே இருக்கிறது , நம் காரியம் முடிந்ததும் அவனை மறந்து விடுகிறோம் . அது தவறு .
ஒரு call ஞாபகம் வைத்து செய்து கேட்பது நன்று , அதனினும் நன்று முடிந்தால் அவனை அவன் வீட்டில் சிறிது time எடுத்து drop செய்து விட்டு வரலாம் . அது அவனுக்கும் satisfy ஆக இருக்கும் , நமக்கும் .
இப்போது சிறிது காலமாக இதை நான் பின் பற்றி வருகிறேன் , அதை முடிந்தவரை நீங்களும் பின்பற்றுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் .
இது நண்பர்களுக்கு மட்டுமில்லை , எல்லா உறவுகளுக்கும் செய்யலாம் . ஒருவரை தேவைக்கு மட்டும் use செய்வது தவறு .
பின்பு இந்த சுயநலம் தனக்கு தனக்கு தனக்கு , என பிறரை பற்றியே சிந்தனை இல்லாமல் நம்மை முன்னே நகற்றி செல்கிறது , நாம் அதில் முன்னே போவது போல் தோன்றினாலும் அது சரியான முன்னேற்றமே இல்லை .
அதே போல் இந்த அகந்தை , நாம் ஏதாவது பெரிய காரியம் செய்து விட்டால் தானாக எட்டி பார்க்கிறது , அதை ஆரம்பத்திலே கிள்ளி எரிவது நன்று , ஏன் எனில் அது நம்மை வளர விடாது .
இந்த நவீன யுகத்தில் , நான் உன்னை விட நன்கு வாழ்கிறேன் , என்பதை தங்களின் status update களில் பலர் செய்து வருகிறார் , இது அவர் அவர் தனி பட்ட உரியமையே , இருந்தாலும் .
இல்லாத பலருக்கு அது ஏக்கம் தர கூடும் .
அதிலும் ரொம்ப கொடியது , மீற்றவை கூட மன்னித்து விடலாம் , ஆனால் மன்னிக்க முடியாதது இந்த சாப்பிடும் பொருள்களில் பந்தா காண்பிப்பது.
இது அடிப்படையிலே ஒருவனை வெறுப்பேத்துவது போன்று எனக்கு தோன்றிருக்கிறது .
இது , சமூக வலைத்தளங்களில் மட்டும் அல்ல . சமூகத்தில் கூட நிறைய நடந்து வருகிறது .
ஜாதி மத பிரிவில் பெரியவன் என்று காண்பிப்பது .
அதிகாரம் , அந்தஸ்தில் பெரியவன் என்று காண்பிப்பது .
வயதில் , seniority ல் பெரியவன் என்று காண்பிப்பது .
இதில் என் கேள்வி என்னவென்றால் , எதுக்கு இது !? இதனால் என்ன கிடைக்க போகிறது !?
ஆனால் இதை பலர் தங்களுக்குள் கேட்டு கொள்வதில்லை .
அவர்களுக்குள்ளே இதை அவர்கள் கேட்டு கொண்டாள் ஏதேனும் மாறலாம் .
எனது ஒரு வேண்டுகோள் என்ன வென்றால் , நாம் ஒருவருக்கு செய்யும் செயலை , நமக்கு அவர் திருப்பி செய்தல் அது நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் .
அந்த சிந்தனையில் சுயநலம் , அகந்தை இரண்டும் தவிடுபொடி ஆகி விடும் .
இங்கே பல நன்மைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது .
நன்றி
~ அரவிந்த் மாணிக்கம்
08.12.2020
அதிகாலை 5.00