Monday, 7 December 2020

நான் என்னும் அகந்தை , தன் என்னும் சுயநலம் .

இப்போது நான் எழுதும் இந்த பகுதி என்னுள் சில காலமாக சங்கடமாக இருந்து கொண்டே வருகிறது . 

இது மனித உணர்வு சமந்த பட்ட விஷயமே . 

இப்போது நாம் பார்க்கும் மனிதர்களில் 100ல் 95பேருக்கு இந்த அல்ப தனம் தன்னை அறியாமல் எதார்த்தமாக தனக்குள் இருந்து வருகிறது . 

பலர் அதை அறிந்தும் மாற்றி கொள்ளாமல் இருக்கின்றனர் . 

இதை எழுதும் நானும் ஒன்றும் விதிவிளக்கல்ல , பல சமயங்களில் நானும் அந்த 95 நபர்களுள் ஒருவனாக இருந்துருக்கிறேன் . 

ஆனால் முடிந்த வரை அதுவாக இல்லாமல் தவிர்க்க முயற்சிக்குறேன் . 

ஆம் அது தான் " நான் " " நான் " "நான் " என்றே அல்ப தனம் . 

இந்த " நான் " இரண்டாக பிரிகிறது . 

ஒன்று " நான் " என்னும் அகந்தை ( ஆணவம் ) 

மற்றொன்று " நான் " என்பது " என் " " எனது " என்ற சுயநலமாக மாறி விடுகிறது . 

மிக்கேல் நைமி எழுதிய மிர்தத்தின் புத்தகத்தில் , நோவா என்பவர் ஒரு மடாலயம் அமைத்து கூறுகிறார் 

" இங்கே உள்ள குருக்கள் யாரும் " நான் " என்ற வார்த்தையை தங்கள் வாயால் கூட சொல்ல கூடாது என்று " 

இந்த " நான் " என்று என்னை , நான் செய்யும் வேலையை எடுத்து காட்டுவதில் தவறு ஒன்றுமில்லை என கருதுகிறேன் . 

ஆனால் இது அகந்தையாகவும் , சுயநலமாகவும் மாறும் சமயம் , அதை நாமளே தவிர்பது நமக்கு நல்லது . 

எடுத்து காட்டாக , இதை பலர் தன்னை அறியாமல் செய்யும் காரியங்களில் சில வற்றை குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன் . 

நாம் அனைவரும் , நமக்கு ஏதாவது வேலைக்கு உதவியாக நண்பர்களை அழைத்திருப்போம் . அவர்களும் நமக்கு உதவி செய்ய கிளம்பி வந்திருப்பார்கள் . அவர்கள் வருவதற்குள் நாம் ஒரு 100 முறை call செய்திருப்போம் . 

ஆனால் அந்த வேலை முடிந்ததும் , அவர்கள் safe ஆக வீட்டிற்கு சென்றார்களா இல்லையா என்று ஒரு call செய்து கூட கேட்க மாட்டோம் , பெரும்பாலும் . 

சுயநலம் அங்கே இருக்கிறது , நம் காரியம் முடிந்ததும் அவனை மறந்து விடுகிறோம் . அது தவறு . 

ஒரு call ஞாபகம் வைத்து செய்து கேட்பது நன்று , அதனினும் நன்று முடிந்தால் அவனை அவன் வீட்டில் சிறிது time எடுத்து drop செய்து விட்டு வரலாம் . அது அவனுக்கும் satisfy ஆக இருக்கும் , நமக்கும் . 

இப்போது சிறிது காலமாக இதை நான் பின் பற்றி வருகிறேன் , அதை முடிந்தவரை நீங்களும் பின்பற்றுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் . 

இது நண்பர்களுக்கு மட்டுமில்லை , எல்லா உறவுகளுக்கும் செய்யலாம் . ஒருவரை தேவைக்கு மட்டும் use செய்வது தவறு . 

பின்பு இந்த சுயநலம் தனக்கு தனக்கு தனக்கு , என பிறரை பற்றியே சிந்தனை இல்லாமல் நம்மை முன்னே நகற்றி செல்கிறது , நாம் அதில் முன்னே போவது போல் தோன்றினாலும் அது சரியான முன்னேற்றமே இல்லை . 

அதே போல் இந்த அகந்தை , நாம் ஏதாவது பெரிய காரியம் செய்து விட்டால் தானாக எட்டி பார்க்கிறது , அதை ஆரம்பத்திலே கிள்ளி எரிவது நன்று , ஏன் எனில் அது நம்மை வளர விடாது . 

இந்த நவீன யுகத்தில் , நான் உன்னை விட நன்கு வாழ்கிறேன் , என்பதை தங்களின் status update களில் பலர் செய்து வருகிறார் , இது அவர் அவர் தனி பட்ட உரியமையே ,  இருந்தாலும் . 

இல்லாத பலருக்கு அது ஏக்கம் தர கூடும் . 

அதிலும் ரொம்ப கொடியது , மீற்றவை கூட மன்னித்து விடலாம் , ஆனால் மன்னிக்க முடியாதது இந்த சாப்பிடும் பொருள்களில் பந்தா காண்பிப்பது. 

இது அடிப்படையிலே ஒருவனை வெறுப்பேத்துவது போன்று எனக்கு தோன்றிருக்கிறது . 

இது , சமூக வலைத்தளங்களில் மட்டும் அல்ல . சமூகத்தில் கூட நிறைய நடந்து வருகிறது . 

ஜாதி மத பிரிவில் பெரியவன் என்று காண்பிப்பது . 

அதிகாரம் , அந்தஸ்தில் பெரியவன் என்று காண்பிப்பது . 

வயதில் , seniority ல் பெரியவன் என்று காண்பிப்பது . 

இதில் என் கேள்வி என்னவென்றால் , எதுக்கு இது !? இதனால் என்ன கிடைக்க போகிறது !? 

ஆனால் இதை பலர் தங்களுக்குள் கேட்டு கொள்வதில்லை . 

அவர்களுக்குள்ளே இதை அவர்கள் கேட்டு கொண்டாள் ஏதேனும் மாறலாம் . 

எனது ஒரு வேண்டுகோள் என்ன வென்றால் , நாம் ஒருவருக்கு செய்யும் செயலை , நமக்கு அவர் திருப்பி செய்தல் அது நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் . 

அந்த சிந்தனையில் சுயநலம் , அகந்தை இரண்டும் தவிடுபொடி ஆகி விடும் . 

இங்கே பல நன்மைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது . 

நன்றி 

~ அரவிந்த் மாணிக்கம் 
    08.12.2020
     அதிகாலை 5.00

Saturday, 16 May 2020

வாழ்வே மாயம் .

அன்று ஒரு அழகிய மாலைப்பொழுது.
கல்லூரி மூன்றாம் ஆண்டு முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன ஜீவாவிற்கு வேலைக்கு போக ஏற்றவாறு சில துணிமணிகள் வாங்க ஜீவாவின் தந்தை அழைத்துச் சென்றார்.

ஜீவாவின் தந்தை பெயர் ரங்கராஜ், ஆல் நல்ல ஆறு அடி உயரம் , முறுக்கு மீசை ,  கனத்த உருவம் என கம்பீரமான தோற்றம் . ஒரு நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டரும் அல்லாது செக்யூரிட்டியும் அல்லாது இரண்டிற்கும் நடுவே ஆன ஹோட்டலிற்கு வருபவர்களுக்கு கதவு திறந்துவிடும் பணி . பெரும்பாலுமான நட்சத்திர ஹோட்டலில் இதை போன்ற நபர்கள் இருப்பார்கள் . சென்றவர்களுக்கு அறியலாம்.  மாதம் ரூபாய் 12,000 சம்பளம் . வரும் நபர்கள் தரும் பேட்டா பொருத்து ரூபாய் 15,000 முதல் 16,000 மாதம் கிட்டும் . மிடில் கிளாஸ் குடும்பம் , சேமிப்பு பெரியதாக எதுவும் இல்லை . குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த சிறு சேமிப்பை ஜீவாவின் படிப்பில் மொத்தமாக செலவிட்டு விட்டார் . ஒரு நார்மலான குடும்பம் அம்மா , அப்பா , ஜீவா , மற்றும் அவனது தங்கை என நான்கு பேர் . 

ஜீவா அவர்களது வீட்டிற்கு வெளியே நிற்க , அவனது தந்தை வண்டி எடுக்க சென்றார் . பழைய மாடல் ஸ்பிளேண்டர் வண்டி . எடுக்கும் போதுதான் கவனித்தார் பெட்ரோல் யாரோ திருடி உள்ளனர் என்று. 

"தம்பி இங்க வா !"

"என்னப்பா ?"

"யாரோ பெட்ரோல் திருடிடாங்க தம்பி. "

"ச்ச ! வண்டில கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெட்ரோல் கூட வைக்க விட மாட்டிக்கிறாங்க,  நான் வேணா போய் பாட்டில்ல 30 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிட்டு வரவா ? "

"கடை பக்கத்துலதான் இருக்கு , வேண்டாம் விடு தம்பி நம்ம பேசிட்டே நடந்து போவோம் ரொம்ப நாளாச்சு இல்ல ஒண்ணா நடந்துபோய் ? " 
"சரிப்பா !".

என்று இருவரும் சில விஷயங்களை பேசிக்கொண்டே நடையை ஆரம்பித்தனர். 

"உனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கா தம்பி ? பிடிக்காமல் செய்ய வேண்டாம் எந்த வேலையும் . " 

"அதெல்லாம் இல்லப்பா ஐட்டி பீல்ட் தான் போகணும்னு ஆசை , அது கெடச்சது சந்தோசம் தான் . ஆனா என்ன நம்ம ஊர்ல ட்ரை பண்ண வேலை கிடைக்கும்னு நினைச்சேன் அதான் மிஸ் ஆயிடுச்சு , பரவால்ல பங்களூரு தானே . ஒரு வருஷம் அங்க ஒர்க் பார்த்துட்டு , வீட்டுக்கு சப்போர்ட் பண்ணிட்டு , அப்படியே இங்கே கிடைக்குமா நானும் ட்ரை பண்ணி பாக்குறேன். " 

"அங்க போக பிடிக்கலையா தம்பி ?"

"அப்படி இல்லப்பா ஆனா உங்க எல்லாரையும் விட்டு அவ்வளவு தூரம் போறது தான் கஷ்டமா இருக்கு.''

" உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்றேன் தம்பி , இதுவரைக்கும் நான் உங்க அம்மா கிட்ட கூட அத சொன்னதில்லை .''

அம்மா கிட்ட கூட சொல்லாத விஷயம் என்னவாக இருக்கும் ? என ஆர்வமாக கவனித்தான் ஜீவா . 

"எனக்கு நான் படிச்சிட்டு இருந்த சமயத்துல மிளிடரில சேரணும்னு ஆசை இருந்துச்சு தம்பி . நாம வேற ஆள் கொஞ்சம் ஹைட் அண்ட் வெயிட்டாக இருப்போமா , நிறைய பேர் போலீஸ்  சேரலாம்ல  மிளிடரில சேரலாம்லனு சொல்லுவாங்க . "

"அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன் உங்க தாத்தா சகுறப்போ . அதோட அவ்வளவுதான் என் கனவெல்லாம் , மேல படிக்கல வீட்டில் மூணு பொம்பளைங்க உங்க பாட்டியும்,  ரெண்டு அத்தையும் நான் ஊரை விட்டுப் வேரா வேலைக்கும் போகல ,  ஆம்பள இல்லாத வீடு என்ன நடக்கும் ? ஒரு பயத்திலேயே நானும் போகல குடும்ப சுமை என்மேல விழுந்துருச்சு.  எப்படியோ உங்க அத்தைகளை கரை சேத்துட்டு இப்ப இந்த நிலைமையில் இருக்கோம் . "

'இவ்வளவையும் நான் ஏன் சொல்றேன்னா ? எங்கப்பா மட்டும்  இருந்திருந்தா ? என்ன மிளிடரி இல்ல போலீஸ் ஆகிருப்பாரு . நான் நினைச்ச மாதிரியே அவர் இல்லாதது நாள என் வாழ்க்கையில் எவ்வளவு திருப்பம் ? . 

"உனக்கு நான் இருக்கேன் தம்பி . என்ன நாலும் சொல்லு நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது".

இதைக்கேட்டு ஜீவா சற்று மௌனமாக இருந்தான் . சில நொடிகள் கழித்து அவன் அவனது அப்பாவின் மூடை ஜாலியாக ஆக்கணும் என்று எண்ணி அவன் இப்படி கேட்டான். 

"அப்போ நான் எதாவது பொண்ண காமிச்சு இவ்வள தான் லவ் பண்ணுறேன் .  இவள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டா என்ன அப்பா பண்ணுவீங்க ?"

"அவனது அப்பா சிரித்தார் . காமி அவங்க வீட்டிலேயும் சம்மதிச்சா , கல்யாணம் பண்ணி வச்சுரலாம் என்றார்."

ஜீவாவின் அப்பா ரங்க ராஜோ , டெம்ப்ளேட் அப்பாகளை போல் இல்லாமல் . கொஞ்சம் பசங்களின் உணர்விற்கு நன்கு மதிப்பு தருப்பவராக இருந்தார் . 

பேசி கொண்டே நடந்து வந்ததில் கடையும் வந்து விட்டது . கடைக்குள் சென்றனர் இருவரும் . 

எப்போதும் ஜீவாவிற்கு ஒரு பழக்கமுண்டு, புது துணியை ட்ரயல் ரூமில் அணிந்து கொண்டு , அதை வெளியே வந்து அவனது அப்பா அம்மாவிடம் காண்பிப்பது . காண்பித்து எப்படி இருக்கு ? என்று கேட்பது . எப்பயும் அவனது ட்ரையல் ரூம் அருகே அவர்களும் காத்திருப்பார்கள்.

அதேபோல் இன்றும் அவன் புது துணியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டான் . துணியும் அணிந்து வெளியே வந்தான் ஆனால் அவனது அப்பா அங்கே நிற்கவில்லை . 

சற்று வெளியே வந்து பார்த்தான் ஒரு ச்சாரில் அவனது அப்பா சோர்வாக அமர்ந்திருந்தார் . 

"என்னப்பா ஆச்சு ? ஒரு மாதிரி டல்லா ஒக்காந்து இருக்கீங்க."

"இல்ல தம்பி மத்தியானம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு கேஸ் பிடிச்சிருச்சு நினைக்கிறேன் . எப்பம் வர்ற மாதிரி இருக்கு ஆனா விட முடியல "

அவன் இருங்கப்பா என்று சென்று தண்ணீர் பிடித்து குடிக்கக் கொடுத்தான்.

தண்ணீர் கொடுத்து விட்டு சட்டையை மாற்றி விட்டு வந்தான். வரும்போது நெஞ்சை பிடித்து கீழே விழுந்தார் ரங்கராஜ் , ஜீவாவுக்கு கையும் ஓடவில்லை , காலும் ஓடவில்லை . டக்கென்று அவரை தோளில் தூக்கினான் . கடையில் இருப்பவர்கள் ஆம்புலன்ஸுக்கு அழைத்தனர், மனிதநேயம் ஆங்காங்கே மிஞ்சி இருக்கத்தான் செய்கிறது . ரங்கராஜை  தூக்கும் அளவிற்கு ஜீவா விற்கும் திடமான உடல் கட்டு தான் . முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வந்தவுடன் ஆம்புலன்ஸ் வந்து விட்டது ஏற்றி அவசரமாக ஆம்புலன்ஸில் சென்றனர் . 

சில தூரம் சென்றவுடன் , நகரெங்கும் பாலம் கட்டுமானம் நடைபெறுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் வண்டி முக்கால் மணி நேரம் ஓரிடத்தில் நின்றது . ஜீவாவிற்கு மிகுந்த வருத்தம் கண்ணில் நீர் கசிய தொடங்கியது , பின் எப்படியோ அரசு மருத்துவமனை வந்தடைந்தது ஆம்புலன்ஸ் . 

அவன் அப்பாவிற்கு நடந்தது , அவனுக்கும் நடந்துவிடுமோ என்று பயப்பட தொடங்கினான்.  

ஸ்திரேச்சேரில் வைத்து உள்ளே கொண்டுசென்றனர் , அவசர சிகிச்சை பிரிவிற்கு அப்போது ஜீவா வெளியே அமைதியாக அமர்ந்திருந்தான் . 
அவனுக்கு அழுகை வரவில்லை , அப்பா பற்றிய எண்ணம் அவனுக்கு ஓடவில்லை ,  அவன் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை சிந்திக்கத் தொடங்கினார் . அப்பா இல்லாமல் போனாலும் அந்த இடத்தில் இவன் இருந்து என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கத் தொடங்கினான் . இதுதான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது உள்ளேயும் சிகிச்சை நடைபெற்று கொண்டே இருந்தது . 

சிறிது நேரம் கழித்து அவனது அம்மாவும் தங்கையும் பதறியபடி அழுது கொண்டே வந்தனர் . 

ஜீவாவிற்கு அவனது அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும் . இருந்தும் அழ முடியாத நிலமையில் இருந்தான் ஜீவா .
அவன் அம்மாவைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை பொங்கியது. இருந்தும் அடக்கிக் கொண்டு  அம்மாவை சமாதானம் செய்தான் ஜீவா. அவனும் அழுதாள் அம்மாவை கவனிக்க யாருமில்லை என உணர்ந்து அழுகையை அடக்கிக் கொண்டு சமாதானம் செய்தான் . 

பின்பு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர் வெளியே வந்தார் ஜீவாவிற்கு பல எண்ணங்கள் ஓடத்தொடங்கியது . 

அவனது அம்மாவும் தங்கையும் அழுதபடி டாக்டரை பார்க்கிறார்கள் . 

அவர்களது குடும்பத்தை பார்த்தபடி டாக்டர் முன்னே வருகிறார். 
சொல்லவருகிறார் அவனது அப்பாவின் நிலைமையை.

வாயைத் திறக்கிறார் என்ன ஆயிற்று என்று சொல்ல ஜீவாவும் கூர்ந்து பார்த்தபடியே இருக்கிறான்.

முடிவு .

(இந்த கதையை நான் முடிக்கவில்லை என் என்றால் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தலாம் தவிர முடிவு செய்யும் பொறுப்பு என்னிடத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன் , இதற்கான முடிவு உங்கள் இடத்தில் விட்டு விட்டேன் . நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் , ரங்கராஜ்ஜிற்கு என்ன ஆயிற்று என்று.  ) 

நன்றி . 

அரவிந்த்
13.05.2020
நள்ளிரவு 12.29

Sunday, 26 April 2020

மொட்டை மாடி

மொட்டைமாடி இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ காரணங்களால் அது தட்டிக் கழிந்து கொண்டே இருந்தது . அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது . இந்த ஊர்அடங்கில் நிறைய அழகான விஷயங்கள் மொட்டை மாடிகள் கவனித்தேன் அதை உங்களுடன் பகிர்கிறேன். 

பொதுவாக மொட்டைமாடி என்றாலே காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும் மிகவும் இஷ்டம் . நான் பல பெண்களிடம் காதல் கவிதைகளைப் பற்றி மொட்டை மாடியில் இருந்து கதைத்தது உண்டு அது ஒரு சுகமான அனுபவம். அப்போதெல்லாம் மொட்டைமாடி தனித்திருக்கும் " ஆளில்லாத காட்டுக்குள்ளே நான் தான் ராஜா "என்பதுபோல ஆண்டு கொண்டிருந்தேன் எங்கள் மொட்டை மாடியை . 

ஆனால் இப்போதெல்லாம் மொட்டைமாடியில் சில குடும்பங்கள் அல்லது சில நபர்களாவது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்காள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது ஏனென்றால் நம் இஷ்டத்திற்கு அலைபேசியில் உரையாட முடியவில்லை சிலபேர் இருப்பதால்.

இருந்தாலும் அந்த காட்சி மொட்டை மாடியில் இருந்து பார்க்க அழகாகவும் , உணர்வு பூர்வமாகவும் , இருக்கும் நான் பொதுவாக பெரும்பாலுமான நேரம் மொட்டை மாடியில் தான் கழிப்பேன் எப்போதும் . அப்போதெல்லாம் ஏதாவது சில மொட்டை மாடிகளில் மட்டும் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் . 
ஆனால் இப்போதெல்லாம் எல்லா மொட்டைமாடிகளிலும் ஆட்கள் நிரம்பி வழிகிறார்கள் . ஒரு சில மொட்டை மாடிகளில் பலர் நண்பர்களாக இருந்து பட்டம் விடுகிறார்கள் . சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பந்து , ஓடிப்பிடித்து விளையாடுவது போன்ற விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். சில தம்பதிகள் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்கிறார்கள் . பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்கிறார்கள்.  நான் கூட ஒரு தடவை அம்மா அப்பா அனைவரையும் மொட்டைமாடிக்கு கூப்பிட்டு வந்து எங்கள் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருக்கும் வீடியோக்கால் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன் . சுற்றி உள்ள அனைத்து மொட்டை மாடிகளிலும் உயிர்கள் , உயிரோடு இருப்பதுபோல் இப்போதுதான் உணர்கிறேன் . 

பின்பு நமது பிரதமர் சொன்ன அந்த ஒளியேற்றும் டாஸ்க் எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை என்றாலும்.  மொட்டை மாடியில் இருந்து நான் அதை பார்த்தேன் சுற்றியும் ஒரு அழகான காட்சி அது . 

இதற்கு இடையே ஒரு குட்டி மொட்டைமாடி காதல் கதை , வேண்டாம் காதல் கதை என்று சொன்னால் என் காதலி கோபித்துக் கொள்வாள். இதை ஒரு குட்டி கதை என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் அதற்கான வகையை படிக்கும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் . 

அன்றொருநாள் அழகிய சாயங்காலம் வேலை.  வழக்கம்போல் நான் மொட்டை மாடியில் இருந்தேன் . அப்போது பக்கத்து கட்டிட மொட்டை மாடியில் ஒரு அழகிய பெண் ,  இருபது வயது இருக்கும் அவள் ஒரு சுவற்றில் அவளது போனை நிப்பாட்டி வைத்து டிக்டாக்கில் ஏதோ ஒரு பாடலுக்கு க்யூட்டாக ஆடிக்கொண்டிருந்தாள் . பொதுவாக டிக்டாக் மேல் பெரிய ஈடுபாடு இல்லாத நான்.  அவள் ஆடும் அழகை மட்டும் ரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தேன் . 

சில நொடிகளில் நான் கவனிப்பதை , அவள் கவனித்து விட்டாள் . சட்டென்று அவள் அலைபேசியை எடுத்து கொண்டு வெட்கத்தில் ஓடிவிட்டாள் . எனக்கு அடடே !!! அவள் அதை முழுவதுமாக முடித்து இருக்கலாமே என்று தோன்றியது. 

இப்போது இருக்கும் வீட்டில் நாங்கள் மூன்று வருடங்களா வசிக்கிறோம்.  மூன்று வருடத்தில் ஒரே முறை தான் அவளை சாலையில் கண்டு இருக்கிறேன் . அப்போது கூட அவள் எனது பக்கத்து கட்டிடம் என்று தெரியாது . 

வாரணம் ஆயிரம் படத்தில் சூரியா கூறுவது போல் " ஒரே கூண்டுல 3 வருஷமா இருந்த கிளிய பார்க்காம என்னடா பண்ண சூர்யா ? " என்பது போல் நான் சூர்யா என்ற பெயரை தூக்கிவிட்டு அரவிந்த் என்ற பெயரை நிறப்பி விட்டு எனக்கு நானே அந்த டயலாக் சொல்லிக்கொண்டேன். 

அவள் ஓடிய பின்பு நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை , நான் என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் அப்போது பேசிக் கொண்டிருந்தேன் . அவள் துணி எடுப்பது போல் வந்து என்னை நோட்டமிட்டாள் நான் இன்ஸ்டாவில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சிரித்துவிட்டு (நான் வேடிக்கையாக நண்பன் கிஷோருடன் டியோவில் பேசிக்கொண்டிருந்தேன்) துணி எடுத்து விட்டு சென்று விட்டாள் . அவளது முகம் எனது மனதில் பதிந்தது அவள் என்ன நினைத்திருப்பாள் ? என்னை பற்றி "இவனும் நம்மள போல கிறுக்கு பையன் தான்" என்றா ?  இருக்கும் . 

அடுத்த நாள் அதே நேரம் மாடிக்கு வந்தாள்.  நான் எப்போதும் மாலை 6 முதல் 8 வரை மாடியில் தான் டேரா .  அப்போது நான் கவனிக்கவில்லை . யாரோடோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் எவ்வளவு நேரம் அந்த இடத்தில் இருந்து என்னை பார்த்தால் என்று தெரியவில்லை.  நான் பார்த்த உடன் சட்டென்று இதற்கு முன்னாடி நாளில் ஓடியது போல் ஓடிவிட்டாள் .  எனக்கு ஆச்சரியம் தான் ! இந்த காலத்தில் ஆண்களுக்கு நிகராக சரக்கு , தம் அடிக்கும் பெண்கள் இருக்கையில் இப்படி வெட்கப்படும் மாடர்ன் பெண் இன்னும் உள்ளார்களா என்று ? சரி நாளை அவள் வந்தால் நாம் பேசி விடுவோம் என்று எண்ணினேன் . 
ஆனால் எனக்கோ ஏமாற்றம்தான் .  தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நான் அவளைப் பார்க்கவில்லை , அவள் வேண்டுமென்று வரவில்லையா ? இல்லை வெட்கமா ? இல்லை ஏதாவது வேலை இருக்குமா ? என்று தெரியவில்லை.  சில நாட்களில் ஃப்ரீயாக விட்டுவிட்டேன் . இந்த இரண்டு நாள் கண்ட ஒரு பெண்ணை மூன்றாம் நாள் காணாதது எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை . ஆனால் ஒரு கதை முழுமையடையாத பீலிங் தான் . 

பின் ஒரு , ஒரு வாரமாக எங்கள் பக்கத்து வீட்டில் இரண்டு வயது குழந்தை ஒன்று இருக்கிறது . அந்தக் குழந்தையின் அம்மா அந்த பாப்பாவை மேலே கூப்பிட்டு வந்து ஒரு பந்தும் கொண்டு வந்துவிடுவார்கள் , நானும் அந்த பாப்பாவும் புட்பால் விளையாடுவோம்.  அந்த பாபாவுடன் விளையாடும் போது நிம்மதியான ஒரு பீலிங் இருக்கும். இது தொடர்ச்சியாக தினமும் நடக்கையில் இதை எழுதுவதற்கு இரண்டு நாள் முன்பு திரும்பவும் அந்த பெண் வந்தாள் எனக்கு ஆச்சரியம் ! 

இந்த முறை அவள் என்னை பார்க்கிறாள் . நான் அந்த பாப்பாவுடன் விளையாடுவதை பக்கத்து கட்டிடத்திலிருந்து , இந்த முறை அவள் ஓடவில்லை .  அதே இடத்தில் நின்று பார்க்கிறாள் , எனக்கு பேசிவிடலாம் என்று வாய் வந்தது . ஆனால் எங்கள் மாடியில் எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள சில பேர் இருந்தார்கள்.  நான் பேசும் ஆசையை அடக்கிக் கொண்டேன் . பின்பு நான் கீழே வீட்டுக்கு இறங்கி வந்து விட்டேன் . ஏமாற்றம் ஆன பீலிங் . அவள் நின்றும் பேச முடியாமல் போனது.  என்ன செய்வது ? விதி என்ற ஒன்றின் மீது இப்போது நம்பிக்கை வந்தது . ஆள் இல்லாத போது அவள் இருக்கவில்லை , அவள் இருந்தபோது நிறைய ஆட்கள் கூட இருந்துவிட்டனர் . என்ன கொடுமை சரவணன் இது ? 

இந்தக் கோரோனவால் எனக்கு இவ்வளவு ஒரு அழகான அனுபவம் கிடைத்து விட்டது . பாருங்கள் " புலி குகையில் பூக்கும் பூ போல"  உலகமே அல்லோல படும் நிலையில் ஆங்காங்கே சில அழகிய கதைகள் மற்றும் நினைவுகளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது .

எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ , பூக்கத்தானே செய்கிறயது ? 
                                                                                            -பிரபஞ்சன்
 
நான் அவளுடன் பேசு வேணா ? மாட்டேனா ? என்று தெரிந்து கொள்ள காத்திருங்கள் இந்த ஊரடங்கு முடிந்து அனைத்தும் இயல்பு நிலை வரும்போது , ஊரடங்கில் ஏற்பட்ட எல்லா அனுபவங்களையும் கோர்த்து ஒரு கட்டுரை எழுதிவேண் . அதில் குறிப்பிடுகிறேன் அதுவரை

உங்கள்
அரவிந்த்
24.04.2020
சாயங்காலம் 7.50 

Sunday, 29 March 2020

கொஞ்சம் எழுத நினைத்தால் நிறைய படியுங்கள்

ஆம் நீங்கள் கொஞ்சமாவது நல்ல தரத்துடன் எழுத வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் நிறைய கவனிக்க வேண்டும். வணக்கம் நான் உங்கள் அரவிந்த் இது என்னுடைய அடுத்த பதிவு, நிறைய நாட்கள் களித்து , இப்போது சிறு இடைவேளையில் நாம் அனைவரும் இருப்பதால் எனக்கு இதை எழுதத் தோன்றியது , நேரம் கிடைத்தது நீங்கள் இதை கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் காலம் அப்படி இருக்கிறது வாங்கல் பதிவிற்குள் போவோம். 

இங்கு எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் ? ஒருவனை எது நல்ல எழுத்தாளன் ஆக்குகிறது ? ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் அவனை நல்லதொரு எழுத்தாளன் ஆக்குகிறது . அப்படிப்பார்த்தால் நம்மை சுற்றி சற்று அதிகமாகவே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை இதுதான் நிதர்சனம்.

என் அப்பா கூறும் அவரது அனுபவங்களை கவனித்தாள் எனக்கு ஒன்று தோன்றும் "நம்ம டாடி ஒரு ரைட்டர் ஆகியிருந்தால் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,கே டப் கொடுத்திருப்பார் னு " அவ்வளவு அனுபவம் அவர் குள்ள இருக்கு . 

என் தாத்தா அவரை விட ஒரு படி மேல் . நாங்க எங்கேயாவது வெளியே செல்லும்போது வழியில் ஏதாவது ஒரு குளமோ அல்லது ஒரு ஆற்றையோ பார்த்துட்டா போதும் அது 1970களில் எப்படி இருந்தது,  1980களில் எப்படி இருந்தது முதல் இப்போது எந்தெந்த நாய்கள் அதில் மணல் திருட்டு செய்கிறார்கள் என்பது வரை சொல்லிவிடுவார் .  நான் ஒரு பேச்சுக்கு ஆறு குளம் பற்றி கூறினேன் ஆனால் அதையும் தாண்டி பல விஷயங்கள் அவர் இன்று பார்த்தாலும் கூறுவர் . என் சிறுவயதில் அவர் கூறுவதை முழுமையாக நான் கவனிக்க மாட்டேன் சலிப்பாக இருக்கும் . ஆனால் இப்போது நன்றாக கவனிக்கிறேன் ஏனென்றால் பல விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.

அதேபோல் இப்பொழுது நான், எனக்கு பழக்கம் இல்லாத மூன்று பெரியவர்கள் பற்றியும் , அவர்களது அனுபவம் என்னுடன் பகிர்ந்தது பற்றியும் , அதில் நான் கவனித்ததையும் உங்களுடன் பகிர போகிறேன்.

முதலாம் நபர் இவரை நான் ஒரு வருடம் முன்பு எனது ''என்கதை" குறும்படத்திற்கு டப்பிங் செய்ய கோவை காந்திபுரம் சென்றிருந்தபோது , காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். 

நான் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தேன் , என் பக்கத்தில் அந்த பெரியவர் அமர்ந்திருந்தார் நல்ல நிறைத்த முடி , வழுக்கை இல்லை ,  அடர்ந்த தாடி சொல்லப்போனால் "நானும் ரவுடிதான்" படத்தில் வரும்  ராகுல் தாத்தாவைப் போல் இருக்கும் அவரது தோற்றம் ஆனால் பேச்சு நல்ல கம்பீரமாகவே இருந்தது வயது 65 முதல் 70 குளிருக்கும். நான் அமர்ந்து இருக்கும் வேளையில் ஒரு பெண் கையில் ஒரு தட்டு வைத்து அதில் அரிசி,  வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு என் அருகில் வந்து "எனக்கு கல்யாணம் நடக்க போகுது அதுக்கு உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க" என்று கூறினார் நான் பத்து ரூபாய் எடுத்து அந்த தட்டில் வைத்தேன். பின்பு அந்த தாத்தாவிடம் அவள் பணம் கேட்டாள் அவர் "போமா" என்று சொல்லி அனுப்பிவிட்டார் காசு கொடுக்கவில்லை. பின்பு அவர் என்னிடம் வந்து " இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு காசு கொடுக்காதீர்கள் தம்பி இதே பொழப்பா சுத்துறாங்க கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு ஏதோ கடைக்கு வேலைக்கு போகலாம் இல்ல" என்றார் நான் "சரி ஐயா" என்று மட்டும் தான் கூறினேன் பின்பு அவர் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் "ஏதாவது 9க (திருநங்கைகள்) அவங்க காசு கேட்ட அவங்க கிட்ட கொடுங்க தம்பி பாவம் 2ம் கட்ட வாழ்க்கை அவர்களுக்கு" என்றார் நானும் "சரி ஐயா "என்றேன்.

பின்பு அவர் பஸ்ஸில் ஒரு திருநங்கைக்கு லிப்லாக் (உதத்தில் முத்தம்) கொடுத்த அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார் , ஆமாம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள் நீங்கள் படித்ததை தான் நானும் எழுதியிருக்கிறேன் ஒரு எழுபது வயது பெரியவர் ஒரு திருநங்கைக்கு லிப்லாக் பேருந்தில் கொடுத்த அனுபவத்தை தான் எனக்கு கூற ஆரம்பித்தார் எனக்கும் கொஞ்சம் சாக்காக தான் இருந்தது அவர் கூறுவது ஆனாலும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது நான் மேலும் கேட்க ஆரம்பித்தேன்.

அவர் ஒருமுறை பேருந்தில் நின்று கொண்டிருந்தபோது சில திருநங்கைகள் வந்து சிலரிடம் காசு கேட்டார்களாம் தொடர்ச்சியாக யாருமே காசு தரவில்லையாம், பின்பு இவரிடம் வரும் போது இவருக்கு பாவமாக தோன்றி ரூபாய் 50 அவர் திருநங்கையிடம் கொடுத்தாராம் அப்போது பட்டு என்று அவரது உதட்டில் அந்த திருநங்கை முத்தமிட்டு விட்டாராம் இவர் செல்லமாக முதுகில் அடித்து விட்டு " போ கழுதை" என்றாராம். அங்கே பேருந்தில் இருந்த அனைவரும் இவரை ஒரு மாதிரி பார்த்தார்கள் என்று அவர் மிகுந்த ஆர்வமுடன் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்பு அவர் கூறினார் " அப்போ அங்க இருபது வயசுல இருந்த வடக்கு பசங்களா என்ன ஒரு மாதிரி பொறாமையா பார்த்தாங்க தம்பி" என்றார் எனக்கு சிரிப்பு வந்து விட்டது நான் "நெஜமாவா தாத்தா" என்றேன் அவர் "ஆமா தம்பி" என்றார்.

பின்பு நான் கூறினேன் " நான் அவங்க சமைச்ச பிரியாணி எல்லாம் சாப்பிட்டு இருக்கேன் செம டேஸ்ட்ஆ பண்ணுவாங்க" என்றேன் அவரும் "ஆமா தம்பி பிரமாதமா பண்ணுவாங்க'' என்றார் அவர் இருக்கும் தெருவில் சில திருநங்கைகள் கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்து பண்ணுகிறார்கள் அதில் சாப்பிட்டு இருப்பதாகவும் கூறினார். பின்பு அவர் சொன்னார் "பரவால்ல தப்பான தொழில் எதுவும் பண்ணாம இந்த மாதிரி செய்யறாங்க அதுவே நல்லது" என்றார் நான் "ஆமாம் தாத்தா" என்றேன் டக்கென்று அவர் அந்த திருநங்கைகளுக்கு மார்க்கெட்டிங் செய்ய தொடங்கிவிட்டார் . அப்போது சரியான நேரத்தில் என் நண்பர்கள் டப்பிங் செய்ய வந்துவிட்டார்கள் . பின்பு அவர் ஒரு சீட்டு அவரது சட்டை பையிலிருந்து எடுத்து,  நான் பேக் போட்டு இருந்தேன் என்னிடம் பேனா வாங்கி அதில் அவரது நம்பர் எழுதிக் கொடுத்திருந்தார் , நான் வாங்கிக் கொண்டேன் பின்பு அவரிடம் " வரேன் ஐயா " என்று கூறி விடைபெற்றேன் .ஏனோ தெரியவில்லை அவரோடு பேசியது பிடித்திருந்தது ஒரு ஐந்து நிமிடத்திற்குள் அற்புதமான கதை கூறிவிட இந்த வயது முதியவர்கள் தான் முடியும் என்று தோன்றியது. 

அடுத்த நபர்,  இது ஒரு ஏழு வருடங்கள் முன் நடந்த ஒரு நிகழ்வு இருந்தாலும் என் மனதில் நிற்கும் மறக்க முடியாத நினைவுகளில் டாப் 20 பட்டியல் எடுத்தால் அதில் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் . 

நான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பு முதல் தான் அரசு பேருந்தில் போயிட்டு வர தொடங்கினேன்.  ஆறாம் ஏழாம் வகுப்புகளில் பள்ளி வேனில் தான் செல்வேன் . எட்டாம் வகுப்பில் ஒரு நாள் வீடு திரும்புகையில் நானும் அப்போது என்னுடன் இருந்த நண்பன் மனோஜும் (இப்போது தொடர்பு இல்லை) இருவரும் ஒன்றாக ஒரு பேருந்தில் ஏறினோம் , கூட்டமாக இருந்தது , எங்கள் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்பில் ஒருவர் இறங்க அந்த காலியான சீட்டில் அமர்ந்திருந்த சுமார் 7 வருடம் முன்பு 65 வயது இருக்கக்கூடிய ஒரு நபர் என்னை அழைத்து அவர் அருகே இருக்கும் இருக்கையில் அமரச் சொன்னார் நானும் அமர்ந்து கொண்டேன். என் எட்டாம் வகுப்பு நண்பன் மனோஜ் என் அருகே நின்று கொண்டன் . பின் அவர் எங்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் முதலில் அவர் " எந்த வகுப்பு " , "எங்கே வீடு" என்பதுபோல் விசாரித்துக்கொண்டு இருந்தார் நாங்கள் அதற்கு பதிலளித்தோம் மேலும் அவர் பேச்சு கொடுத்த போது அப்போது சிறு வயது அல்லவா கடத்திட்டு போய் விடுவாரோ ? என்ற பயத்தில்"  ஏன் கேட்கிறீங்க ?" என்றேன் சரியாக அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்வியில் . 

அப்போது அவர் என்னவோ கேட்டார்,  ஆனால் என்ன கேட்டார் என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேட்டது நாட்டை காப்பாற்றியவன் இதைக்கூட தெரிஞ்சுக்க கூடாதா என்பதுபோன்ற பாணியில்தான்.

ஆமாம் அவர் " ரிடையர் மிலிட்டரி " என்று கூறினார். கூறும்போது எங்களுக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம் போகப் போக நம்பும் வாரு இருந்தது அவர் பேச்சு.

ஆரம்பத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகம் இல்லை ஞாபகம் உள்ளவரை குறிப்பிடுகிறேன். அவர் பார்டரில் இருந்ததை பற்றி குறிப்பிட்டார், அவருக்குப் பிடித்த துப்பாக்கி வகை பற்றி பேசும்போது  அவர் குறிப்பிட்டார் . நான் அவரிடம் எத்தனை கொலை பண்ணி இருக்கீங்க? என்று கேட்டேன் அவர் 26ஓ 27ஓ குறிப்பிட்டார் , ஆனால் தோராயமாக இல்லை துல்லியமாக தான் குறிப்பிட்டார். பின்பு அவரது போர் அர்ம்ஸ் பிடிக்கச் சொன்னார் நானும் பிடித்தேன் அவர் முறுக்கினாள் அவரது போர் அர்ம்ஸ் வேற லெவளாக புடைத்தது எங்களுக்கு பயங்கர ஆச்சரியம் அந்த போர் அர்ம்ஸ் பற்றி இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தான். நான் என் ஜிம்மில் பல பாடி பில்டர்ஸ் ஓட போர் அர்ம்ஸ் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வகையில் இல்லை,  அந்த ஏதோ வகை துப்பாக்கியால் சுடும் போது இவ்வாறு வரும் என்று கூறினார். அவருடன் பேசுவது வியப்பாக இருந்தது பின்பு அவர் ரிடையர் ஆன பின்பு அவர் என்ன செய்கிறார் என்று மனோஜ் கேட்டான் என்று நினைக்கிறேன். அவர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் 11 கடைகள் வைத்து நடத்தி வருவதாக கூறினார் எல்லாம் சிறுபான்மையான கடைகள் மளிகை கடை, இளநீர் வண்டி, ஜூஸ் கடை , போன்று 11-ம் கூறினார் என்று ஞாபகம் உள்ளது, ஆனால் என்னவென்று ஞாபகம் இல்லை.

பின்பு அவர் பணி காலத்தில் வீட்டுக்கு வரும்போது அவரது தந்தை தினமும் காலை எழுப்பி விட்டு அவர் நாட்டுக்காக பணி செய்வதால் கையெடுத்து ஒரு கும்பிடு போட்டு வணங்குவாராம் . இது அவர் அப்போது கூறியது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது  . பின்பு கல்யாணமானவர் தான் அவர் அது கேட்டதும் ஞாபகம் உள்ளது. 

நான் அவரிடம் அவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் ? என்று கேட்டேன் அவர் அவரது பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதை காண்பித்து பின்னிருக்கும் அனைத்து மொழியும் தெரியும் என்று கூறி அனைத்தையும் படித்தும் காண்பித்தார் வியப்பு தான் எனக்கும் என் நண்பனுக்கும். ஆனால் அவர் பொய் சொல்லியிருப்பார் என்று இப்போது வரை எனக்கு தோன்றவில்லை. 

 கடைசியில் நான் இறங்கும் நிறுத்தம் வந்தது என் நண்பன் மனோஜுக்கு முதலில் கைகொடுத்தார் பின்பு என்னிடம் கைகொடுத்து " நீ பச்சைத்தண்ணில குளிக்கிறாயா , சுடு தண்ணீரில் குளிகிக்கிறாயா ? " என்று கேட்டார் நான் சொன்னேன் " வெயில் நாட்களில் அம்மா  பச்சைத்தண்ணில குளிக்க சொல்லுவாங்க மீதி நேரம் சுடு தண்ணீரில் தான் குளிப்பேன்" என்றேன் அவர் சிரித்தார் ஏன் கேட்டார் தெரியவில்லை, இறங்குவதால் நானும் கேட்கவில்லை , இது நிஜமாக நடந்த உண்மை வாசிக்கும் அனைவரும் நம்ப வேண்டும் அவர் சிரித்துவிட்டு '' உன்னோட பேச்சு நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப பிடித்திருக்கு" என்றார் நான் சிரித்து விட்டு இறங்கி விட்டேன்.
 
மறுநாள் நானும் என் நண்பன் மனோஜும் இவரைப்பற்றி வகுப்பில் அனைவரிடமும் , ஆசிரியர்களிடமும் சொல்லிக் கொண்டோம் அனைவரும் வியப்பானது என்று ஞாபகம் உண்டு. வியப்படைவதில் சந்தேகமில்லை ஏனென்றால் அவர் அப்படி எனக்கு இப்போது கூடவே வியப்பாக இருக்கிறது அவரை நினைத்தால்.  60 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே ஒரு வியப்பு தான் எவ்வளவு அனுபவத்தை பார்த்து வந்து இருப்பார்கள் . அதில் இவர் பெரும் வியப்பு ஏனென்றால் ராணுவத்தில் இவர் எத்தனை ஊர்கள் சென்றிருப்பார் , எத்தனை கடுமையான நிலமையில் தங்கி, உறங்கி, உணவு உண்டு இருப்பார் . அப்போது இவர் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் நாம் கற்றுக்கொள்ள , எவ்வளவு விஷயம் இருக்கும் வியப்படைய , எனக்கு இப்போது தோன்றுகிறது ஏன் பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தான் .  ஒரு இருபது முப்பதாவது கிலோமீட்டர் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது அப்போது நிறைய தெரிந்திருக்கும் எங்களுக்கும்,  நிறைய எழுத இருந்திருக்கும் எனக்கும் . 

அடுத்த நபர் இவரும் ஒரு இன்ட்ரஸ்டிங் . நான் பத்தாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் கண்டேன் , நான் குடும்பத்துடன் கோவையிலிருந்து விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு விருதுநகருக்கு ரயில்லில் சென்ற போது எதிர் சீட்டில் அமர்ந்திருந்த நபர் . நல்ல டீசன்டான தோற்றம்,  காலர் வைத்த டீசர்ட்டில் மூன்று பட்டண்களையும் போட்டு அந்த டிஷர்ட்டைப் இன் பண்ணி இருந்தார் . நல்ல கச்சிதமான உடற்கட்டு உடம்பில் கட்டிங்ஸ் எல்லாம் சிறப்பாக இருந்தது.
 
அவருடன் எப்படி பேச்சு ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் ஆரம்பித்துவிட்டது . அவர் ஒரு நாட்டு மருத்துவர் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பேசிக்கொண்டு வந்தார் .  என் அம்மா நன்றாக அவரிடம் பேசி நிறைய மெடிகல் டிப்ஸ் அவரிடமிருந்து கறந்துகொண்டார். 

அப்போது என் அப்பா அவரிடம் எவ்வளவு வயது ? என்று கேட்டார் அவரோ 63 என்றார் எங்களுக்கு பயங்கர ஷாக் , அனைவருக்கும் . பார்த்தால் அப்படி தெரியவில்லை ஐந்து வருடம் முன்னாடி என் அப்பாவிற்கு வயது 43 அவரை கூப்பிட்டு இவர் என் அப்பாவோட ஸ்கூல் மேட் இப்ப வரைக்கும் பிரண்ட்ஸ் என்று சொன்னால் நம்பிவிடும் தோற்றம்.  ஐந்து வருடத்தில் என் அப்பாவிற்கு தோற்றம் கூட கொஞ்சம் முதுமை ஆகிவிட்டது ஆனால் அவர் இருந்தால் அப்படியே தான் இருப்பார் அதில் சந்தேகமில்லை.

அதற்கு அவர் உடம்பையும் தோற்றத்தையும் எப்படி பாதுகாக்கிறார் ? என்று வழிகள் கூறினார் . அது நிச்சயம் பின்பற்றுவது கடினம் . நான் கூப்பிடுகிறேன் முடிந்தால் நீங்கள் பின்பற்றுங்கள்.  63 வயதில் அவர் பின்பற்றியது . 

*தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

*ஒரு மணி நேரம் யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.

*63 வயது வரை அவர் கண்ணாடி போடவில்லை அதற்கு அரை மணி நேரம் தினமும் காலை கண் பயிற்சி செய்ய வேண்டுமாம் . அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தார். நீங்கள் என்னை நேரில் பார்க்கும்போது கேளுங்கள் நான் உங்களுக்கு சொல்லித் தரேன்.

*தினமும் அரை மணி நேரம் வாசிப்பு.

*தினமும் குறைந்தது 5 கிலோ மீட்டராவது நடைப்பயிற்சி செய்ய வேண்டுமாம்.

*எண்ணெய் அறவே சேர்க்கக்கூடாது , நாட்டுச்சர்க்கரை தான் இனிப்பிற்கு சேர்க்கணும்.  சைவம் தான் அவர் . 63 வயது வரை அவருக்கு பிபி ,சுகர், கொலஸ்ட்ரால் எதுவும் வந்தது இல்லையாம். 

*அவர் வீட்டில் டிவி இல்லை.

*தினமும் இரவு 8 மணிக்கு தூக்கம். இரவு 8 முதல் காலை 4 ,  8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் அதற்கு நடுவில் அவரது பணி.

இதுதான் அவரது தினசரி பழக்கம் . அவரது வாழ்வை அவர் இப்படி வடிவமைத்துக் கொண்டார்.  இதை நாம் பின்பற்றுவது கொஞ்சம் கடினம் தான் ஆனால் முடியாத காரியம் இல்லை ஆனால் இதைப் பின்பற்றினால் 20வயது இளமையாக தெரியலாம் அது சரிதான் சந்தேகம் இல்லை. பின்பு அவர் மகன் பேரன் பற்றி குறிப்பிட்டார்.

நடுவிலான விஷயம் ஒன்று. போகும்போது என் அம்மா மிச்சர் பாக்கெட் எடுத்து எங்களுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள் அப்பா , அம்மா , நான் , தங்கை . அனைவரும் சாப்பிட்டோம் . அவருக்குக் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார் கேட்டால் பழக்கம் இல்லை என்றால் அப்போது வியப்பாக இருந்தது . '' நான் கேட்டேன் என்ன சார் சிகரட் , சரக்கு சொல்ற மாதிரி சொல்றீங்க? " அப்போ அவர் சொன்னார் எண்ணெய் உடம்பில் சேர்கிறது சிகரெட்,  சரக்கு அளவுக்கு இதுவும் பின்னாடி எஃபெக்ட் பண்ணும்னு . இருந்தும் என்ன பண்றது சிகரெட் , சரக்கு அடிக்கிறாவங்க அது கெட்டது ன்னு தெரிஞ்சும் அடிப்பாங்களே , அதே மாதிரி அவர் சொன்ன அப்புறமும் இந்த எண்ணெய் பலகாரம் நம்மளால விட முடியல.  அவர் ஒரு இரண்டு மணி நேரத்துல இறங்கிவிட்டார் . ஆனால் அந்த இரண்டு மணி நேரத்துக்குள்ள ரொம்ப ரொம்ப பெரிய பாடம் சொல்லிக் கொடுத்தார் உணவு பழக்க முறை எப்படி இருக்கணும்னு .  "அது சரியா இருந்தா என்ன மாதிரி இருக்கலாம் டா வயசானாலும்"  என்று சொல்வது போல் ஒரு லிவிங் எக்ஸம்பிளே அங்கிருந்து காட்டிவிட்டார். 

இப்போ ரீசண்டா ஒரு அண்ணா பெயர் குறிப்பிடப் போவதில்லை,  சில மாதங்கள் முன்னாடி ஏதோ பற்றி பேசும் போது இவர் டாபிக் வந்துச்சு அப்போ அவர் சொன்னார் " அவர் நிறைய வருஷம் வாழனும் டெய்லி செத்துகிட்டு இருக்காரு டான்னு " இருக்கட்டும் அவர் போல இல்லனாலும் இதை படிக்கும் அனைவரும் கொஞ்சமாவது தங்களது உடல்களை பேணுங்கள் ஏன் கூறுகிறேன் என்றால் , அதை சொன்ன அண்ணாவிற்கு வயது 25 க்கு குறைவு தான் ஆனால் அவரால் கீழே சம்மணங்கால் போட்டு உட்கார முடியாது. அவர் உடல் வாகு அப்படி.  இத நான் அவரை கிண்டல் பண்ணா எழுதவில்லை ஆனால் யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். 

இதுதான் பெரியவர்கள் அவர்கள் எப்போதும் ஒரு வியப்பு தான் . நமக்கு தாத்தா-பாட்டி இருக்கும்பட்சத்தில் அவங்கள ஒதுக்காமல் நிறைய அவங்க கிட்ட பேசுங்க இப்போ நிறைய நேரம் வேற இருக்குது. 

இவங்க எல்லாம் எழுத்தாளர் ஆகாதது ஒரு வகையில் நமக்கு நல்லதுதான்.  நமக்கு காம்படிஷன் கொஞ்சம் குறைவுனு மனச தேத்திகனும் . அனுபவம் விளையாடுது சொல்லுவாங்களே அது இது தான் . நீங்க எழுத்தாளர் ஆகணும்னா முதல்ல வயசானவங்க  பேசுறத காது கொடுத்து கவனிங்க அது போதும்.

ஒரு பொதுவான விஷயம் என்னன்னா எனக்கு இந்த மூன்று பேரோட பெயர்களும் ஞாபகம் இல்லை அது ஒரு சின்ன வருத்தம் அளிக்கிறது.

கொஞ்சம் எழுத நிறைய கவனிங்க , ஏன் சொல்றேன்னா நான் இந்த கொஞ்சம் எழுத எனக்கு ஒரு எட்டு ஆண்டுகளாக நடந்த அனுபவத்தை பயன்படுத்தி இருக்கேன் நீங்க நிறைய கவனித்து அதிலிருந்து கொஞ்சமா எழுதும்போது அந்த எழுத்து தரமாக இருக்கும். 

எழுத்துக்கள் தொடரும்.... 




அரவிந்த்
28.03.2020
நள்ளிரவு 3.15

Friday, 20 March 2020

தனிமை 2

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

நான் அழுது கொண்டிருக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

நான் பயந்து போய் கிடக்கிறேன் . 
 
என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

ஒரு கோடை மழையில் , டீ கடையில் ஒதுங்கி சூடாக வடை போண்ட சாப்பிட்டவாறு ஒருவரிடம் கதைக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

பேருந்தில் வீடு வரும் வரை , ஒருவரது தோல்களில் சாய்ந்து உறங்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

இரவு நேரத்தில் யாருடனாவது நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

விடியும் வரை மொட்டை மாடியில் அமர்ந்து யாருடனாவது கதைக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

கொட்டும் மழையில் கூட்டமாக சேர்ந்து கூத்தாட்டம் போட வேண்டும் போல் இருக்கிறது. 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

என் தோழிகளை ரசித்து ரசித்து புகைப்படம் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

காம , குரோத , வக்கிர எண்ணங்கள் என்னை சூழ்கின்றது , அதிலிருந்து என்னை வெளியே கொண்டு வாருங்கள் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

என் இலட்சிய பாதையில் முன்னேற உதவுங்கள் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் ......

~ அரவிந்த் மாணிக்கம் .

Thursday, 19 March 2020

தனிமை 1

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் ,

அடிக்கடி பச்சோந்தி போல் நிறம் மாறும் மனிதர்களிடம் இருந்து விளகி நிற்க ஆசை படுகிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நான் நிறையா வாசிக்க , கொஞ்சம் எழுத நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

தொலைந்து போய் , திரும்ப வர வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நான் என்னை நேசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

என் டைரியை படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

என்னுள் இருக்கும் கிறுக்கனை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

கதறி அழ வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

தியாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

ஒரு மரத்தடியில் தூங்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நிர்வாணமாக ஒரு ஆற்றிலோ அல்லது குளத்திலோ நீந்த வேண்டும் என்று நினைக்கிறேன் .

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் .........

~ அரவிந்த் மாணிக்கம் .

Sunday, 16 February 2020

96 ஒரு கவிதை .

2018ம் ஆண்டு , அறிமுக இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கி விஜய் சேதுபதி , திரிஷா நடித்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் 96 .

இந்த படத்தை பல முறை கண்டதுண்டு .

ஆனால் இப்போது சமீபத்தில் ஒரு காட்சி மனதை பிரட்ட செய்தது .

நான் முழு படத்தை பற்றி எழுத போவதில்லை , இந்த குறிப்பான காட்சியை பற்றி தான் குறிப்பிட போகிறான் .

ஆம் , இந்த காட்சி தான் உங்களால் முடிந்தால் ஒரு முறை முழுமையாக இந்த காட்சியை பாருங்கள் .

காட்சியின் ஆரம்பத்தில் திரிஷா அனைவரிடமும் கேட்பார் " நீங்க எல்லாம் சாப்பிடிங்களா ? " என்று அப்போதே விஜய் சேதுபதி அவர் பசியில் இருப்பதை உணர்ந்து எழுந்து உணவெடுக்க போய் விடுவார் .

அப்போது திரிஷா கண்ணில் ஏக்கத்தோடு இருப்பதை உணர்ந்து , தேவ தர்ஷிணி அவரது நண்பரை அந்த இடத்திலிருந்து பற்றி விட , அப்போது bucks தானாக எழுந்து கிளம்பி விடுவார் .

ஆனால் திரிஷாக்கோ , இவ்வளவு ஆண்டு கலித்து பார்த்த தனது காதலனுடன் சில நேர தனிமை வேண்டி , தேவ தர்ஷினியையும் கிளப்பி விடுவார் .

அப்போது விஜய் சேதுபதி உணவெடுத்து கொண்டிருப்பார் , அவர் உணவெடுக்கும் style-eh அழகாக ஒரு maturityயாக இருக்கும் . தான் தன் காதலிக்கு தரப்போகும் காதல் , பாசம் , ஆசை , ஒரு அரவணைப்பு போன்ற எல்லாம் களந்த handling .

இது காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதி , பிரியாணி செய்து கொடுப்பார் , அதில் இருக்காது . கவனித்தால் தெரியும் .

விஜய் சேதுபதி உணவு கொண்டுவருவது முதல் tableல் வைக்கும் வரை இந்த maturity handling இருக்கும் .


பின்பு plateஐ வைக்கும் போது , திரிஷா left hander என்று அறிந்து spoonஐ இடது பக்கம் திருப்பி வைக்கும் காட்சி எதார்தத்தின் உச்சம் . 

பின்பு " நீ சாப்பிடல ? " என்று திரிஷா கேட்க்கும் போது , விஜய் சேதுபதியும் சாப்பிடவில்லை என்று தெரிந்து கொள்வார் திரிஷா .

அப்போது திரிஷா சாப்பிடுவதை விஜய் சேதுபதி பார்ப்பதே மிகவும் அழகாக இருக்கும் . அவர் ரசிப்பார் , அதில் கண்களே பேசும் .

பின்பு அவர்களது நண்பர்கள் , அந்த காதல் மலர்வதை கண்டு பயப்படுவது போல் காட்சி அமைந்திருக்கும் .

இப்போது தான் இந்த காட்சியிலே ஒரு முக்கிய கட்டம் , இதில் திரிஷா தான் பாதி உண்ட உணவை விஜய் சேதுபதிக்கு அவரும் சாப்பிடாதாள் அவருக்கு கொடுத்து விடுவார் .

இங்கு கோவிந்த் வசந்தின் magic மெதுவாக ஆரம்பிக்கும் . இப்போது திரிஷா சாப்பிட்ட அதே spoonல் விஜய் சேதுபதி முதல் வாய் வைப்பார் . நமக்கே பார்க்கும் போது " ஆகா " என்றிருக்கும் , உணவின் ருசி அல்ல , காட்சியின் ருசி .

அவர் முதல் வாய்யே மிகவும் உணர்ந்து சாப்பிடுவார் . இதை எவ்வாறு எடுத்து கொள்ள ? தான் காதலின் வாய் வைத்து சாப்பிட்ட அதே spoonil இவர் சாப்பிடுவதையும் , அதிலும் அவர் தரும் அந்த reactionsம் . " என்ன feeling டா ? " என்று என்னிடமே என்னை கேட்க வைத்தது .

அதில் அவர் முதல் வாய் சாப்பிட்டு அதை விழுங்கும் போது தரும் ஒரு பக்குவமான reaction விஜய் சேதுபதியை ஒரு நல்ல நடிகனாக என்னை மெய் சிலிர்க்க வைத்தது . சவைத்து கொண்டே திரிஷாவை எதார்த்தமாக ஒரு பார்வை பார்ப்பார் , அய்யோ கொன்னுட்டார் .

அந்த காட்சியில் உபயோகித்திருக்கும் slow.mo , shot divisons பின்பு கோவிந்தின் இசை , இதை ஒரு perfect melodrama வாக மாற்றியது .

எனக்கு மிகவும் உணர்ச்சியூட்டும் காட்சிகளின் பட்டியல் எடுத்தால் அதில் இந்த top 3 ல் நிச்சயம் இருக்கும் .

காதலில் ரசிக்க விஷயங்களா இல்லை ?

இத்தகைய உணர்ச்சி மிக்க காட்சியை படமாக்கிய பிரேம் குமார் அவர்களுக்கு நன்றி .

நேற்று இரவு video upload செய்தேன் , ஆனால் அதற்கு copy rights போட்டு அந்த videoவை சன் டீவி block செய்து விட்ட காரணத்தால் இப்போது screen shot share செய்கிறேன் .

#lifeisbeautiful

~ அரவிந்த் மாணிக்கம் .



Thursday, 23 January 2020

என் வானிலே , ஒரே வெண்ணிலா 💙

மகேந்திரன் sir இயக்கி , ரஜினி காந்த் மற்றும் ஶ்ரீதேவி நடிப்பில் , இளையராஜா அவர்களது இசையில் , கவிஞர் கண்ணதாசன் எழுதி , "ஜானி" படத்தில் இடம் பெற்றுள்ள "என் வானிலே ஒரே வெண்ணிலா " பாடலை இப்போதெல்லாம் கேட்க்கும் போது ஒரு நிகழ்வு நினைவிற்க்கு வருகிறது . 

நான் சில மாதங்களுக்கு முன்பு சகோதரர் ஒருவரின் உறவினருக்கு இரத்த தானம் செய்ய , கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் . 

அப்போது வேண்டிய test எல்லாம் எடுத்து விட்டு , இரத்தம் எடுக்க ஆரம்பித்தார்கள் , எனக்கு ஒரு கல்யாணம் ஆகாத நடு வயது Nurse தான் ஊசி குத்தி வேண்டியவை செய்து கொண்டிருந்தார் , தனி அரை யாருமில்லை . அவர் சற்று உர்ர்ர் என்றே முக பாவணையிலே தான் இருந்தார் சிரிக்க கூட இல்லை , நானும் பெரிதாக கண்டுக்கவில்லை . பின்பு கையில் smiley ball குடுத்து விட்டு " pump பண்ணுங்க " என்று கூறி உள்ளே மற்றோரு அரைக்கு சென்று விட்டார் . நானும் படுத்தாவறு ballஐ pump பண்ணி கொண்டிருந்தேன் . 

அந்த மற்றோரு அரையிளிருந்து இந்த பாடல் (என் வானிலே ஒரே வெண்ணிலா) மென்மையான குரலில் ஒளிக்க தொடங்கியது . நானும் நன்கு கவணித்தேன். கிட்ட தட்ட 30 - 40 வீனாடிகள் பாடி முடித்தவுடன். அந்த Nurse திரும்பவும் நான் இருக்கும் அறைக்கு வந்தார் , அப்போதும் அந்த உர்ர்ர்ர் முக பாவணை தான். 

திரும்ப அந்த அறைக்கு சென்றார் , மறுபடியும் பாடல் ஒளித்தது . இப்போதும் அதே போல் ஒரு 30 - 40 வீனாடி பாடி முடித்த பின் திரும்ப என் அறைக்கு வந்தார் அந்த Nurse. நான் இருக்கும் அறையில் அவர் பாடவில்லை. 

என் அறைக்கு வந்ததும், "sister அந்த பாட்டு யார் பாடுனாங்க?" என்று கேட்டேன் . அவர் "நான் தான்" என்றார்." உங்க voice நல்ல இருக்கு"  என்று கூறினேன் உண்மையில் பல பின்னனி பாடலர்களில் சில பின்னனி பாடலர்களை விட நன்றாக தான் இருந்தது அவர்களது குறள் .

நான் "உங்க voice நல்ல இருக்கு" என்று கூறிய பின்பு உர்ர்ர்ர் என்ற அவர்களது முகம் சிறிது மலர்ந்தது . அப்போது அவர் கூறினார் "Hospital la Evening competition இருக்கு , அதான் practice பண்ணிட்டு இருக்கேன்" என்றார் , நான் சொன்னேன் "கண்டிப்பா உங்களுக்கு prize கிடைக்கும் , all the best" என்று. அதற்கு அவர்கள் புன்னகை செய்தார். 

இவ்வாறு பலர் பலரது வேலைகளால் சோர்ந்து இருக்கும் போது ஒருவரது சிறு புன்னகையோ அல்லது சிறு அன்பான வார்த்தை கூட அவர்களின் அந்த மொத்த சோர்வையும் போக்கி விடுகிறது. 

சமிபத்தில் Helen என்ற ஒரு மலையாளா திரைப்படத்தில் climax காட்சியில் , ஒரு Watch man பெரியவர் , ஒரு செய்தி கூறுவார் (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) அதை போல ஒருவருக்கு நாம் சிரித்த வாறு கூறும் simple good morning கூட பலருக்கு புத்துணர்வு தருகிறது.

Thursday, 16 January 2020

Maturity

Maturityயை பற்றி ஒரு Maturity Post . 
நம் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட வயதிற்க்கு மேல் சில அனுபவங்களை சந்திக்கும் போது , Maturity என்ற வார்த்தையும் அதன் அர்த்தமும் உணர முடிகிறது . 

இது சுமராக 16 - 18 வயதில் நமக்கு மீசை நன்கு வளரும் வயது முதல் தொடங்கி , மீசை நிரைக்கும் வயது வரை மாரி கொண்டே தான் இருக்கிறது இந்த Maturity . 

எனக்கு 2018ஆம் ஆண்டு முதல் diary எழுதும் பழக்கம் உண்டு , அப்போது வயது 18ன் முடிவு 19ன் தொடக்கம் . அப்போது முதல் இப்போது வரை அந்த பழக்கம் தொடர்கிறது . 
அவ்வப்போது பழைய diary எடுத்து படிக்கும் பழக்கம் உண்டு . இந்த Maturity என்ற வார்த்தை தெரிந்த பின் நான் செய்யும் காரியம் அனைத்தும் Maturity ஆக உள்ளது என்று எண்ணிணேன் , ஆனால் இப்போது பழைய diary படிக்கும் போது இது நம்ம சின்ன பையன் தனமா பண்ணிருக்கோம் என்று சிரிக்கிறேன் இந்த 2020ல் .

அதே போல் ஒரு 2022 வரும் போது இந்த ஆண்டில் நான் Maturity ஆக செய்தேன் என்று நினைக்கும் சில விஷயங்கள் , அப்போது எனக்கு Maturity இல்லை என்று தோணலாம் . 
நம் வாழ்க்கையில் இந்த Maturity வயது வளரும் போது மாரிக்கொண்டே இருப்பது அல்ல , பல அனுபவங்கள் கிடைக்கும் போது மாருவது . 
கடைசில இந்த Maturity கூட நிலையற்றது என விளங்குது . 

எழுத்து - அரவிந்த மாணிக்கம்