Sunday, 26 April 2020

மொட்டை மாடி

மொட்டைமாடி இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ காரணங்களால் அது தட்டிக் கழிந்து கொண்டே இருந்தது . அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது . இந்த ஊர்அடங்கில் நிறைய அழகான விஷயங்கள் மொட்டை மாடிகள் கவனித்தேன் அதை உங்களுடன் பகிர்கிறேன். 

பொதுவாக மொட்டைமாடி என்றாலே காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும் மிகவும் இஷ்டம் . நான் பல பெண்களிடம் காதல் கவிதைகளைப் பற்றி மொட்டை மாடியில் இருந்து கதைத்தது உண்டு அது ஒரு சுகமான அனுபவம். அப்போதெல்லாம் மொட்டைமாடி தனித்திருக்கும் " ஆளில்லாத காட்டுக்குள்ளே நான் தான் ராஜா "என்பதுபோல ஆண்டு கொண்டிருந்தேன் எங்கள் மொட்டை மாடியை . 

ஆனால் இப்போதெல்லாம் மொட்டைமாடியில் சில குடும்பங்கள் அல்லது சில நபர்களாவது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்காள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது ஏனென்றால் நம் இஷ்டத்திற்கு அலைபேசியில் உரையாட முடியவில்லை சிலபேர் இருப்பதால்.

இருந்தாலும் அந்த காட்சி மொட்டை மாடியில் இருந்து பார்க்க அழகாகவும் , உணர்வு பூர்வமாகவும் , இருக்கும் நான் பொதுவாக பெரும்பாலுமான நேரம் மொட்டை மாடியில் தான் கழிப்பேன் எப்போதும் . அப்போதெல்லாம் ஏதாவது சில மொட்டை மாடிகளில் மட்டும் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் . 
ஆனால் இப்போதெல்லாம் எல்லா மொட்டைமாடிகளிலும் ஆட்கள் நிரம்பி வழிகிறார்கள் . ஒரு சில மொட்டை மாடிகளில் பலர் நண்பர்களாக இருந்து பட்டம் விடுகிறார்கள் . சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பந்து , ஓடிப்பிடித்து விளையாடுவது போன்ற விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். சில தம்பதிகள் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்கிறார்கள் . பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்கிறார்கள்.  நான் கூட ஒரு தடவை அம்மா அப்பா அனைவரையும் மொட்டைமாடிக்கு கூப்பிட்டு வந்து எங்கள் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருக்கும் வீடியோக்கால் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன் . சுற்றி உள்ள அனைத்து மொட்டை மாடிகளிலும் உயிர்கள் , உயிரோடு இருப்பதுபோல் இப்போதுதான் உணர்கிறேன் . 

பின்பு நமது பிரதமர் சொன்ன அந்த ஒளியேற்றும் டாஸ்க் எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை என்றாலும்.  மொட்டை மாடியில் இருந்து நான் அதை பார்த்தேன் சுற்றியும் ஒரு அழகான காட்சி அது . 

இதற்கு இடையே ஒரு குட்டி மொட்டைமாடி காதல் கதை , வேண்டாம் காதல் கதை என்று சொன்னால் என் காதலி கோபித்துக் கொள்வாள். இதை ஒரு குட்டி கதை என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் அதற்கான வகையை படிக்கும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் . 

அன்றொருநாள் அழகிய சாயங்காலம் வேலை.  வழக்கம்போல் நான் மொட்டை மாடியில் இருந்தேன் . அப்போது பக்கத்து கட்டிட மொட்டை மாடியில் ஒரு அழகிய பெண் ,  இருபது வயது இருக்கும் அவள் ஒரு சுவற்றில் அவளது போனை நிப்பாட்டி வைத்து டிக்டாக்கில் ஏதோ ஒரு பாடலுக்கு க்யூட்டாக ஆடிக்கொண்டிருந்தாள் . பொதுவாக டிக்டாக் மேல் பெரிய ஈடுபாடு இல்லாத நான்.  அவள் ஆடும் அழகை மட்டும் ரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தேன் . 

சில நொடிகளில் நான் கவனிப்பதை , அவள் கவனித்து விட்டாள் . சட்டென்று அவள் அலைபேசியை எடுத்து கொண்டு வெட்கத்தில் ஓடிவிட்டாள் . எனக்கு அடடே !!! அவள் அதை முழுவதுமாக முடித்து இருக்கலாமே என்று தோன்றியது. 

இப்போது இருக்கும் வீட்டில் நாங்கள் மூன்று வருடங்களா வசிக்கிறோம்.  மூன்று வருடத்தில் ஒரே முறை தான் அவளை சாலையில் கண்டு இருக்கிறேன் . அப்போது கூட அவள் எனது பக்கத்து கட்டிடம் என்று தெரியாது . 

வாரணம் ஆயிரம் படத்தில் சூரியா கூறுவது போல் " ஒரே கூண்டுல 3 வருஷமா இருந்த கிளிய பார்க்காம என்னடா பண்ண சூர்யா ? " என்பது போல் நான் சூர்யா என்ற பெயரை தூக்கிவிட்டு அரவிந்த் என்ற பெயரை நிறப்பி விட்டு எனக்கு நானே அந்த டயலாக் சொல்லிக்கொண்டேன். 

அவள் ஓடிய பின்பு நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை , நான் என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் அப்போது பேசிக் கொண்டிருந்தேன் . அவள் துணி எடுப்பது போல் வந்து என்னை நோட்டமிட்டாள் நான் இன்ஸ்டாவில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சிரித்துவிட்டு (நான் வேடிக்கையாக நண்பன் கிஷோருடன் டியோவில் பேசிக்கொண்டிருந்தேன்) துணி எடுத்து விட்டு சென்று விட்டாள் . அவளது முகம் எனது மனதில் பதிந்தது அவள் என்ன நினைத்திருப்பாள் ? என்னை பற்றி "இவனும் நம்மள போல கிறுக்கு பையன் தான்" என்றா ?  இருக்கும் . 

அடுத்த நாள் அதே நேரம் மாடிக்கு வந்தாள்.  நான் எப்போதும் மாலை 6 முதல் 8 வரை மாடியில் தான் டேரா .  அப்போது நான் கவனிக்கவில்லை . யாரோடோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் எவ்வளவு நேரம் அந்த இடத்தில் இருந்து என்னை பார்த்தால் என்று தெரியவில்லை.  நான் பார்த்த உடன் சட்டென்று இதற்கு முன்னாடி நாளில் ஓடியது போல் ஓடிவிட்டாள் .  எனக்கு ஆச்சரியம் தான் ! இந்த காலத்தில் ஆண்களுக்கு நிகராக சரக்கு , தம் அடிக்கும் பெண்கள் இருக்கையில் இப்படி வெட்கப்படும் மாடர்ன் பெண் இன்னும் உள்ளார்களா என்று ? சரி நாளை அவள் வந்தால் நாம் பேசி விடுவோம் என்று எண்ணினேன் . 
ஆனால் எனக்கோ ஏமாற்றம்தான் .  தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நான் அவளைப் பார்க்கவில்லை , அவள் வேண்டுமென்று வரவில்லையா ? இல்லை வெட்கமா ? இல்லை ஏதாவது வேலை இருக்குமா ? என்று தெரியவில்லை.  சில நாட்களில் ஃப்ரீயாக விட்டுவிட்டேன் . இந்த இரண்டு நாள் கண்ட ஒரு பெண்ணை மூன்றாம் நாள் காணாதது எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை . ஆனால் ஒரு கதை முழுமையடையாத பீலிங் தான் . 

பின் ஒரு , ஒரு வாரமாக எங்கள் பக்கத்து வீட்டில் இரண்டு வயது குழந்தை ஒன்று இருக்கிறது . அந்தக் குழந்தையின் அம்மா அந்த பாப்பாவை மேலே கூப்பிட்டு வந்து ஒரு பந்தும் கொண்டு வந்துவிடுவார்கள் , நானும் அந்த பாப்பாவும் புட்பால் விளையாடுவோம்.  அந்த பாபாவுடன் விளையாடும் போது நிம்மதியான ஒரு பீலிங் இருக்கும். இது தொடர்ச்சியாக தினமும் நடக்கையில் இதை எழுதுவதற்கு இரண்டு நாள் முன்பு திரும்பவும் அந்த பெண் வந்தாள் எனக்கு ஆச்சரியம் ! 

இந்த முறை அவள் என்னை பார்க்கிறாள் . நான் அந்த பாப்பாவுடன் விளையாடுவதை பக்கத்து கட்டிடத்திலிருந்து , இந்த முறை அவள் ஓடவில்லை .  அதே இடத்தில் நின்று பார்க்கிறாள் , எனக்கு பேசிவிடலாம் என்று வாய் வந்தது . ஆனால் எங்கள் மாடியில் எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள சில பேர் இருந்தார்கள்.  நான் பேசும் ஆசையை அடக்கிக் கொண்டேன் . பின்பு நான் கீழே வீட்டுக்கு இறங்கி வந்து விட்டேன் . ஏமாற்றம் ஆன பீலிங் . அவள் நின்றும் பேச முடியாமல் போனது.  என்ன செய்வது ? விதி என்ற ஒன்றின் மீது இப்போது நம்பிக்கை வந்தது . ஆள் இல்லாத போது அவள் இருக்கவில்லை , அவள் இருந்தபோது நிறைய ஆட்கள் கூட இருந்துவிட்டனர் . என்ன கொடுமை சரவணன் இது ? 

இந்தக் கோரோனவால் எனக்கு இவ்வளவு ஒரு அழகான அனுபவம் கிடைத்து விட்டது . பாருங்கள் " புலி குகையில் பூக்கும் பூ போல"  உலகமே அல்லோல படும் நிலையில் ஆங்காங்கே சில அழகிய கதைகள் மற்றும் நினைவுகளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது .

எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ , பூக்கத்தானே செய்கிறயது ? 
                                                                                            -பிரபஞ்சன்
 
நான் அவளுடன் பேசு வேணா ? மாட்டேனா ? என்று தெரிந்து கொள்ள காத்திருங்கள் இந்த ஊரடங்கு முடிந்து அனைத்தும் இயல்பு நிலை வரும்போது , ஊரடங்கில் ஏற்பட்ட எல்லா அனுபவங்களையும் கோர்த்து ஒரு கட்டுரை எழுதிவேண் . அதில் குறிப்பிடுகிறேன் அதுவரை

உங்கள்
அரவிந்த்
24.04.2020
சாயங்காலம் 7.50 

No comments:

Post a Comment