Thursday, 15 April 2021

5 வருடம்

ஒரு 5 வருடம் , இந்த ஒரு 5 வருடத்திற்குள் என்னவெல்லாம் நடக்கலாம் ? 

இந்த ஒரு 5 வருடத்தில் , 100ஆண்டு காலம் வாழ்ந்த மனிதனின் சகாப்தம் முடியலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , பிறந்த சிசு தனது வாழ்வின் முதல் படியான பள்ளியில் கால் வைக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , கட்டுமஸ்தானாக இருந்த ஒரு உடல் சீக்கு வந்து துரும்பாக மாறலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , ஓமகுச்சி போல் இருந்த ஒருவன் அர்னால்டுகே சவால் விடலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , நமது ஆசை காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , நமக்கும் வேறு ஒரு ஆசை காதல் அமையலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , வாழ்வில் உள்ளூரை தாண்டாத ஒருவர் உலகம் சுற்றும் வாலிபனாக மாறலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உலகம் சுற்றித்திரிந்த ஒருவரால் தனது இருக்கையை விட்டு கூட நகர முடியாத நிலைக்கு தள்ள படலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , தங்க தட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த ஒருவன் , நடுத்தெருவுக்கு வரலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உணவகத்தில் எச்சி தட்டு எடுக்கும் ஒரு பையன் தங்க தட்டில் சாப்பிடலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , பெரிய ஆளுமை கூட எளிதாக மண்ணுக்குள் போகலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , இவனெல்லாம் ஒரு ஆளாக யாராலும் மதிக்கப்படாத ஒரு ஆள் பெரிய ஆளுமை ஆகலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உங்களுக்கு பெரிய அதிசயம் நடக்காமல் , மாறுதல் நடக்காமல் , இருந்ததை போலவே இருக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உங்களுக்கு சொட்டை விழலாம் , நரை முடி வரலாம் , தோல் சுருக்கம் விடலாம் , கிழவன் , கிழவி ஆகலாம்  . 

இந்த ஒரு 5 வருடத்தில் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் , அவ்வளவு தாங்க வாழ்க்கை . 

குறிப்பு - ( இது நான் எனது பழைய area விற்கு ஓட்டு போட சென்ற போது உணர்ந்தது , அவ்வப்போது பழைய area க்கு சென்றாலும் சிலரை சந்திக்கும் வாய்ப்பே கிடைத்தது , நான் வீடு மாறிய 5 வருடத்தில் பலரை போன வாரம் தான் பார்த்தேன் . எவ்வளவு வேகமாக செல்கிறது வாழக்கை ) 

~ அரவிந்த் மாணிக்கம்
    16.04.2021
     அதிகாலை - 04.32

No comments:

Post a Comment