Friday, 6 August 2021

My Kinda Love 💙

பின்னொரு நாளில், ஏதாவது ஒரு நாளில் .

நான் உனக்கு i love you சொல்ல கூடும் ,

அல்லது நீ எனக்கு i love you சொல்ல கூடும்,

இருவரும் காதல் செய்வோம், இந்த So Called காதலர்கள் என்ற பட்டியலில் வராமல் காதல் செய்வோம்,

சில சமயங்களில் நான் உனக்கு அப்பாவாக,

சில சமயங்களில் நான் உனக்கு மகனாக,

சில சமயங்களில் நான் உனக்கு சகோதரனாக,

சில சமயங்களில் நான் உனக்கு நண்பனாக,

சில சமயங்களில் நான் உனக்கு ஆசிரியானாக, மாணவனாக,

சில சமயங்களில் நல்ல வழி காட்டியாக,

சில சமயங்களில் உனது எல்லமுமாக,

கடைசி வரை நமக்கு நாம் துணையாக வாழ்வில் சேர்ந்திருப்போம்.

நமக்குள் நிச்சயம் சண்டை நடக்கும், ஆனால் அது நமது வாழ்க்கை யை விட  வழு குறைவானது என்று நிரூபிப்போம்,

சந்தர்ப்ப சூழ்நிலையால் நாம் சேராமல் கூட போகலாம், பிரிவு உண்டாகலாம். இருந்தும் காதல் செய்வோம்,  பிரியாமல்.

மற்றொரு நாளில் நீ உனது கணவனுடனோ?
நான் என் மனைவி உடனோ நாம் எங்கேனும் சந்திக்க கூடும்.

அப்போது நம் பிரிதலை அங்கே முன்னிருந்தாமல், ஒரு புரிதலில் நாம் நான்கு பேரும் சேர்ந்து ஒரு நல்ல Dinner செல்வோம். அப்போதும் ஒரு அழகிய உணர்வில் வாழ்வோம்.

ஆனால் முக்கியாமக இது நடக்கூடாது (பிரிதல்) என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

வா, வாழ்வோம், வாழ்க்கை முழுவதும் நமக்கு நாமே எல்லமுமாக.

வா, காதலிப்போம், நாம் காதலர்கள் என்ற வலையில் விழுந்துடிடாமல்.

ஏனெனில் இந்த பிரபஞ்சம் பேரன்பானது 💙.

~ அரவிந்த் மாணிக்கம்
    06.08.2021
    மதியம் 03.56

Thursday, 15 April 2021

5 வருடம்

ஒரு 5 வருடம் , இந்த ஒரு 5 வருடத்திற்குள் என்னவெல்லாம் நடக்கலாம் ? 

இந்த ஒரு 5 வருடத்தில் , 100ஆண்டு காலம் வாழ்ந்த மனிதனின் சகாப்தம் முடியலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , பிறந்த சிசு தனது வாழ்வின் முதல் படியான பள்ளியில் கால் வைக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , கட்டுமஸ்தானாக இருந்த ஒரு உடல் சீக்கு வந்து துரும்பாக மாறலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , ஓமகுச்சி போல் இருந்த ஒருவன் அர்னால்டுகே சவால் விடலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , நமது ஆசை காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , நமக்கும் வேறு ஒரு ஆசை காதல் அமையலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , வாழ்வில் உள்ளூரை தாண்டாத ஒருவர் உலகம் சுற்றும் வாலிபனாக மாறலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உலகம் சுற்றித்திரிந்த ஒருவரால் தனது இருக்கையை விட்டு கூட நகர முடியாத நிலைக்கு தள்ள படலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , தங்க தட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த ஒருவன் , நடுத்தெருவுக்கு வரலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உணவகத்தில் எச்சி தட்டு எடுக்கும் ஒரு பையன் தங்க தட்டில் சாப்பிடலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , பெரிய ஆளுமை கூட எளிதாக மண்ணுக்குள் போகலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , இவனெல்லாம் ஒரு ஆளாக யாராலும் மதிக்கப்படாத ஒரு ஆள் பெரிய ஆளுமை ஆகலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உங்களுக்கு பெரிய அதிசயம் நடக்காமல் , மாறுதல் நடக்காமல் , இருந்ததை போலவே இருக்கலாம் . 

இந்த ஒரு 5 வருடத்தில் , உங்களுக்கு சொட்டை விழலாம் , நரை முடி வரலாம் , தோல் சுருக்கம் விடலாம் , கிழவன் , கிழவி ஆகலாம்  . 

இந்த ஒரு 5 வருடத்தில் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் , அவ்வளவு தாங்க வாழ்க்கை . 

குறிப்பு - ( இது நான் எனது பழைய area விற்கு ஓட்டு போட சென்ற போது உணர்ந்தது , அவ்வப்போது பழைய area க்கு சென்றாலும் சிலரை சந்திக்கும் வாய்ப்பே கிடைத்தது , நான் வீடு மாறிய 5 வருடத்தில் பலரை போன வாரம் தான் பார்த்தேன் . எவ்வளவு வேகமாக செல்கிறது வாழக்கை ) 

~ அரவிந்த் மாணிக்கம்
    16.04.2021
     அதிகாலை - 04.32

Saturday, 3 April 2021

Foreign Feelings 💙

அது ஒரு அழகிய இலையுதிர் காலம் , கம்பீரமான Eiffel Tower நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அழகிய Paris . அழகிய Parisற்கு இன்னும் அழகு சேர்த்தது சாலையோரம் முழுவதும் படர்ந்து கிடந்த Brown நிற இலைகள் . அன்று காலை 11:00 மணி இருக்கும் பரபரப்பு இல்லாமல் மிகவும் இதமாக நகரம் இயங்கிக் கொண்டிருந்தது திரும்பும் இடம் எல்லாம் கலைநயம் கண்களுக்குத் தென்படும் அழகிய நகரத்தில் மிக அழகான ஒரு காபி ஷாப்.  

இந்த காபி ஷாப்பில் தான் நம் கதையின் நாயகன் அறிமுகமாகிறார் . ஆங்கிலம் பேசுபவர்களே அரைவாசி தான் இருக்கும் Parisல் நம் கதாநாயகன் செல்போனில் யாரிடமோ தமிழில் பேசிக் கொண்டிருக்கிறான்.  

" Excuse me , நீங்க தமிழா ? " 

அவன் Phoneல் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கிறான். French அழகு சேர்ந்த ஒரு துருதுரு தமிழ் பெண் வயது 23 முதல் 24 இருக்கக்கூடும் அவள் தான் நம் கதையின் நாயகியும் கூட . 

"ஆமா"  என்று கூறிவிட்டு ஒரு சின்ன Smile .

நம் கதையின் நாயகன் ஒரு 25 வயது Handsomeமான கொஞ்சம் Descent ஆன Silent ஆன ஆள் .

 இவள் அமர்ந்து அவனிடம் பேச ஆரம்பிக்கிறாள் , அப்போது அவன் Callலை Disconnect செய்கிறான் . " Paris ல இங்கிலீஷ் பேசுறவங்களே  கம்மி இதுல தமிழ் பேசுற உங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப Happy ah  இருக்கு . "

" Yeah ! Same Here " .

" நீங்க மணிரத்னம் Fan ah என்ன ? எல்லாத்துக்கும் ரொம்ப கம்மியா பேசுறீங்க ? " 

" Hey Actually நான் மணிரத்னம் சாரோட ரொம்ப பெரிய Fan அவருடைய எல்லாம் Movies உம் பார்த்திருக்கேன்.  "

" செம ல ? Unexpected ah கண்டு பிடிச்சுட்டேன் " 

" ம்ம்ம், (சிரித்தவாறு)" 

" நீங்க என்ன Purpose ah இங்கே வந்துருக்கீங்க ? "
 
" நான் ஒரு Civil Engineer , இங்க ஒரு Museum ah Construct பண்றாங்க One year ah போயிட்டு இருக்கு அதுல இந்தியால இருந்தும் 5 Engineers ah Hire பண்ணி இருக்காங்க , அதுல நானும் ஒருத்தன் . இன்னைக்கு லீவு அதான் கொஞ்சம் Free ,  நீங்க ? " 

" நான் இங்க master's பண்ண வந்தேன் , Fine Artsல Course முடிய போகுது இன்னும் ரெண்டு மாசத்துல முடிஞ்சிடும்,  இந்தியா போன உடனே கல்யாணம் ." 

" Oh Congrats in Advance "

" Thanks " 

" Can i ask you something ?  உங்க  Age Girls  இவ்வளவு சீக்கிரம் Marraige  பண்ணி வச்சா ரொம்ப Upset ah இருப்பாங்க , நீங்க என்னடான்னா இவ்வளவு ஜாலியா இருக்கீங்க ? " 

" எனக்கு என் Love ah வீட்ல accept பண்ணிட்டாங்க Love comes arrange எங்களோடது அதான் " .

" Its good to hear " . 

முதல் சந்திப்பிலேயே ஒரு பெண் அவனிடம் இவ்வளவு Casual ஆக எல்லாவற்றையும் பேசுவது அவனுக்கு வித்தியாசமாகவும் , புதிதாகவும் இருந்தாலும் , அது அவனுக்கு  பிடித்திருந்தது. அப்போது டேபிளில் இருந்த அவனது Mobileலுக்கு ஏதோ Notification வருகிறது . அவன் Mobile ஒரு second On ஆக Wallpaperல் அவனும் ஒரு அழகிய பெண்ணும் இருப்பது போன்ற ஒரு Photo இருக்கிறது .  இதை அவள் பார்த்து விடுகிறாள் . 

" அவங்க யாரு உங்க Girl Friend ah ? " 

" ஆமாங்க " ( சிரிக்கிறான் ) 

"  She looks pretty " என்று கூறிவிட்டு அவளும்  சிரிக்கிறாள் . 

இவள் இவளவு casual ஆக பேசுவதால் அவனும் மனம் விட்டு பேச முடிவு செய்கிறான் . 

" எனக்கு இந்த Construction Project முடிஞ்சதும் நான் இந்தியா போயிருவேன் , அதுக்கப்புறம் Marraigeகாண work ah start  பண்ணனும் ." 

"  உங்க வீட்டில,  அவங்க வீட்டில எல்லாம் Okay ah ?" 

        " கொஞ்சம் பிரச்சனை இருக்கு அவங்க அப்பா Accept பண்ணிக்க மாட்டிக்கிட்டாரு but Convience பண்ணனும் ." 

இதோடு அவள் மேலே கேட்பதை நிறுத்திக் கொள்கிறார் . இனி அவங்க Personals பற்றி கேட்பது அநாகரிகம் என்று அவள் நினைத்துக் கொள்கிறாள் . " எல்லாம் சரியாகும் " என்ற ஆறுதல் வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு Topic ஐ மாற்றுகிறாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்கள் , பின் நமது கதாநாயகன் காபி குடித்து முடித்துவிட்டு ஏந்திக்கிறான்.
 கதாநாயகி சாப்பிட்டதற்கும் சேர்த்து அவன் Pay பண்ணுகிறான் அவள் தடுக்கிறாள் மீறி அவன் Pay பண்ணுகிறான் . 

" உங்கள பார்த்தது ரொம்ப Happy ah  இருக்கு . A Good time ,  அப்ப நான் கிளம்பட்டுமா ? "

" இன்னைக்கு நீங்க Free ah ? "

" Sunday தான் ரூம் போய் Movies பார்ப்பேன் வேற பெருசா Program எதுவும் இல்லை , Free தான் ஏன் ? "

 " Can we Hangout ? "

 அவன் யோசிக்கிறான் , பின்பு 
" Yeah Sure  "

 இருவரும் அப்படியே நடக்கிறார்கள் மணி மதியம் ஒன்று ஆகிறது நமது கதாநாயகன் கேட்கிறான்.  

 " லஞ்சு சாப்பிடலாமா ? "

"ம்ம்ம் Okay ! "

" எங்க போலாம் ? "

"நான் ஒரு ஸ்பெஷல் Place க்கு கூப்பிட்டு போறேன் என்கூட வாங்க "        
அவள் அவனை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.  

" ஹே ! என்ன இங்க ? "

"  அட வாங்க  "

என்று உள்ளே அழைத்துச் செல்கிறாள் . 
"  இதான் என்னோட Sweet Home உட்காருங்க " 

 ஹீரோ வீட்டை சுற்றிப் பார்க்கிறான் கொஞ்சம் கலைப்பொருட்கள் வரைபடம் என மிகவும் அழகாக இருக்கிறது வீடு 

 "Nice Home"

"ஹாஹா !  Thanks"  ஒரு ஓவியத்தை உற்று பார்த்த பின்பு

" நீங்க என்னை வரைவீங்களா ? 
"
"வரையலாமே !!"

 என்று கூறி அவள் ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்து Caricrature என்று கூறப்படும் வகை ஓவியத்தை வரைகிறாள் , இந்த வகை ஓவியத்தை  ஐந்து நிமிடத்தில் முடித்து விடலாம் . இவளும் வேகமாக முடித்து அவனது கையில் கொடுக்கிறாள் . 
அவன் பார்த்து சிரிக்கிறான் . 

" சூப்பரா இருக்குங்க , இதை நான் வச்சு கட்டுமா ? "

"  Oh ! Yes " 

 அவன் அதை அவனது பேக்குகள் வைக்கிறான்.

 "okay ஒரு 15 Minutes wait பண்ணுங்க "
என்று கூறி அவள் கிச்சனுக்குள் செல்கிறாள் . இவன் அமர்ந்திருக்க சீக்கிரம் சமையல் ரெடியாகிறது . சாம்பாரும் கூட்டும் வைத்திருந்தாள் . 

" Woah Paris ல சாம்பார் சாதமா ?  Wonderful "

என அவன் நெகிழ்ந்தான் அவன் ஒரு வாய் எடுத்து வைத்ததும் சிறிது Emotional ஆனான் அவனுக்கு  ஊர் ஞாபகம் வந்தது. அவளுக்கு Thanks என்றான் . அவள் அதை Serious ஆக எடுத்துக் கொண்டால் இன்னும் emotional ஆவான் என்று உணர்ந்து . அந்த Mood ஐ  Lite ஆகவே மெயின்டெய்ன் செய்யுமாறு சிரித்தாள் .  
"இங்க சில Indian Groceries கிடைக்காதுல அதுக்கு என்ன பண்ணுவீங்க ? "

" அதுவா ...?  Actually எங்க அப்பாதான் , நான் நல்ல சாப்பிடணும்னு மாச மாசம் Courier ல அனுப்பிவைப்பார் . இதுல நான் Use பண்ற மிளகாய்த்தூள் , Pepper எல்லாமே எங்க Home made தெரியுமா ?  அவ்வளவு செல்லம் அவங்களுக்கு நான் . நான் வந்து இங்க படிக்கிறதே  அவங்களால தாங்க முடியல , நான் கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்கு போறப்போ எப்படி Handle பண்ணுவாங்களோ ? "

 என்று அவள் Emotional ஆக ,  இப்போது இவன் அந்த Mood ஐ seriousஆகா விடாமல் lite ஆகவே Maintain செய்தான் . 
Correct ஆக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவனுக்கு ஒரு வீடியோ கால் வருகிறது அது அவனது காதலி . இவனும் அட்டெண்ட் செய்து பேசுகிறான் . பேசிவிட்டு நமது ஹீரோயினை அவனது காதலியிடம் Introduce பண்ணுகிறான் .  ஒரு வீட்டில் இருவரும் தனியாக இருக்கிறார்கள் , இருந்தும் எந்த சலனமும் இல்லாமல் அவனது காதலி அவளிடத்தில் நன்றாக பேசுகிறாள் . அவளுக்கு ஆச்சரியம் வேற France ல் தமிழ் பேசுபவர்களை பார்த்ததில் அதனால் அவனது காதலி ஹீரோயினிடம் கூடுதல் நேரம் பேசுகிறாள் . ஆனால் நமது ஹீரோயினுக்கு சற்று வியப்புதான் அந்த Call முடிந்ததும் இவள் அந்த வியப்பில் அவனிடம் கேள்வி கேட்கிறாள் . 

"நான் ஒன்னு கேப்பேன் நீங்க தப்பா எடுத்துக்க கூடாது "

" கேளுங்க " 

" எப்படி உங்க Lover என்கிட்டயும் இவ்வளவு Free ah பேசுறாங்க ?" 

" ஏன் இதுல எங்க இருக்கு ? "

அவள் சற்று தயங்கி சொல்கிறாள்

"  நீங்க என்கூட தனியா இருக்கீங்க , But அவங்க எதுவும் தப்பா நினைக்காம ....."  என்று இலுக்கிறாள் .

" Hey , listen ரெண்டு விஷயம் சொல்றேன் , ஒன்னு She Knows me . நான் எப்படி ஒரு பொண்ணுகிட்ட Behave பண்ணுவேன்னு அவளுக்குத் தெரியும். Then the trust she have on me ,  அது ஒரு Relationshipளே Mutual ல ரெண்டு பேருக்கும் இருந்தாலே போதும் . நான் இதுவரைக்கும் அந்த Trust ah Brake பண்ணது இல்ல.  அவளும் பண்ணது இல்ல Simple " 

இவளுக்கு அவன் இதை சொல்லும் போது உள்ளுக்குள் என்னவோ செய்தது . 

" Same இதே என் Boyfriend பார்த்திருந்த அவ்வளவுதா நான் " 

 அவன் சிரித்தான் 

" Actually பசங்களுக்கு கொஞ்சம் Possesiveness பொண்ணுங்கள விட ஜாஸ்தி தான் . வேற பசங்க பேசுனா tension ஆவங்க . அதனால , அவங்க கோபப்படுவாங்க தவிர தப்பா நினைக்க மாட்டாங்க.  எங்களுக்கு Trust இருக்கு நம்ம Love ah Brake பண்ண மாட்டாங்கனு . But Expressing வேணா கொஞ்சம் Rough and tough ah  இருக்கும் . நீங்க இப்போ சொல்லாட்டியும் Next அவர்கிட்ட பேசும்போது என்னை பத்தி சொல்லுங்க கண்டிப்பா  அவர் ஃப்ரீயா எடுத்துப்பாரு எதுவும் Open ah சொல்லிட்டோம் ன பிரச்சனையே இல்லை " 

இவன் கூறுவதை கேட்டதும் அவளுக்குள் ஏதோ ஒரு வித புரிதல் வந்தது போன்று அவளுக்கு தோன்றியது . இனி நடக்கும் பாதிக்கு பாதி சண்டைகளை குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்தது. 

பின்பு அவன் அவளிடம் கேட்டான் 

" ஏங்க , இன்னைக்கு நம்ம Eiffel Tower போலாமா ? இதுவரைக்கும் நான் உள்ள போனதே இல்ல வெளிய பார்த்ததோடு சரி . "

" Seriously ஏன் உள்ளே போனதே இல்லை ? " 

" Work, Home, work, home  அப்படியே இருந்துட்டேன் அது தோணவே இல்ல . இன்னைக்கு ஒரு கம்பெனி கிடைச்சதும் தான் தோணுது .

" சரி , வாங்க நான் கூப்பிட்டு போறேன் "

 என்று கூறி ஒரு சின்ன Smile செய்தாள் 
இருவரும் வந்து ஒரு டபுள் டக்கர் பஸ்சில் ஏறினார்கள் . மேல் தளத்திற்கு சென்றார்கள் View மிக அழகாக இருந்தது . இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தார்கள் . சிறிது நேரத்தில் Eiffel tower வந்து சேர்ந்து விட்டார்கள் .

உடனே மேலே செல்லாமல் கீழே சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள் . பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் டவர் மேலே Lift வழியாக சென்றனர்,  மேல் தளத்திற்கு வந்து விட்டனர் " ஓ அழகிய Paris "  என்ன ஒரு அழகான View ? என்று நமது ஹீரோ உணர்ந்தான். அவனுக்கு புல்லரித்தது . கை ரோமங்கள் அனைத்தும் எழுந்தது . அதை நமது ஹீரோயினிடம் காண்பித்தான் ,  அதைக் கண்டு அவளும் சிரித்தாள் . பின்பு தடுப்பு சுவர் அருகே சென்று இருவரும் மாற்றி மாற்றியும் , இருவரும் ஒன்றாகவும்,  Eiffel towerரையும் , Eiffel tower உடனும் போட்டோ எடுத்துக் கொண்டனர் . அங்கு சற்று ஜன நெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அந்தக் கூட்டத்தில் ஒருவர் ஹீரோவை சிறிதாக இடிக்க இவனது shoulder ஹீரோயினின் Shoulder ஐ உரசியது . அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவன் அந்த சின்ன உரசளையும் ஆழமாக உணர்ந்தான் அவனுக்கு என்னமோ செய்தது உள்ளுக்குள்ளே அதை முகத்தில் காண்பிக்காமல் இருக்க Casual ஆக முகத்தை திருப்பிக்கொண்டான் . 

அந்த முகத்தை திருப்பிய பக்கம் அங்கே ஒரு French ஜோடி , French முத்தம் உதட்டில் கொடுத்து கொண்டு இருந்தனர் . இது இவனை மேலும் பரவசம் அடைய செய்தது , பட்டென்று அவன் திரும்ப Heroine ன் கண்களை மிக அருகே அவன் பார்த்தான் . Heroine ன் கண்களை இவனும் , இவனது கண்களை heroineம் . இவனது மனதுக்குள் ஒன்னு தோன்றியது அது என்னவாக இருக்கும் என்று வாசிக்கும் உங்களிடம் தீர்மானிக்க விட்டு விடுகிறேன் . 

ஆனால் அந்த எண்ணத்தை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தான் . அப்படி ஏன் நினைத்தோம் ? என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்  .பின்பு சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்து Paris ன் அழகையும் , Eiffel tower ன் அழகையும் இருவரும் ரசித்து கொண்டிருந்தனர் . கொஞ்சமாக இருட்டிய பின் மாலை 7 மணி ஆனதும் இரவு விளக்கு வெளிச்சத்தில் Eiffel tower ஐ பார்த்து விட்டு அங்கே இருந்து அவர்கள் புறப்பட்டனர்.  

அங்கே இருந்து ஒரு tram train ஏறினார்கள் . கூட்டம் குறைவாக இருந்தது அவர்கள் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டனர் . இருவரும் லோட லோடவென பேசி கொண்டே வந்தார்கள் . அவர்களுக்குள் Wavelength நன்றாக sink ஆகியிருந்தது . நிறைய விஷயம் பேசினார்கள் , Relationship , Culture , Politics , Movies , Musics , Books என்று பல பல .

அவன் Book பற்றி பேசும் போது சொன்னான் 

" என் bag ல ஒரு book இருக்கு , கவிதை புக் Online ல order பண்ணி போன வாரம் தான் இந்தியா ல இருந்து வந்துச்சு , இன்னும் படிக்கல ." 

என்று கூறிவிட்டு bag ல் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான் " என் ஓவியம் , உங்கள் கண்காட்சி" என்ற வண்ணதாசன் அவர்களின் புத்தகம் அது . 

" வண்ணதாசன் சார் " கவிதைகள் கொஞ்சம் கொஞ்சம் Facebook ல படிச்சிருக்கேன் , அதான் இத வாங்குனேன் என்றான் அவன் . 

இவனுக்கு அவள் ஓவியம் கொடுத்ததை போல் , இவன் இந்த புத்தகத்தை அவளுக்கு கொடுக்க முடிவு செய்தான் . அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் ஒரு குறுந்செய்தி எழுதி , யாருக்குமே புரியாத அவனது கையொப்பதை கிறுக்கி அவளுக்கு present செய்தான் . 

Hey !!! என்று அவள் உற்சாகமானாள் . 

" எனக்கு நாலு வருஷமா Book Reading Habbit இருக்கு ஆனால் இதான் எனக்கு வந்த First book present , thanks a lot என்றாள் . "

அவனுக்கு அதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது அவர்களது இறங்கும் இடமும் வந்துவிட்டது இறங்கி 10 நிமிடம் நடக்க வேண்டும். இருவரும் பாட்டு கேட்டுக் கொண்டே நடந்தார்கள் .
அவளுக்கு குத்துப்பாட்டு என்றால் பிடிக்கும் , அவனுக்கோ பழைய Classic Hits தான் பிடிக்கும் . இருவரும் ஒரு டீலில் குத்து பாட்டு ஒன்று பழைய பாட்டு ஒன்று என்று கேட்டுக் கொண்டே நடந்து சென்றனர் 

" நீங்க Dance ஆடுவிங்களா ? " என்று அவள் கேட்டாள்

 " ஏன் ? "
 
" ஆமா இந்த songக்கு ஆடி காட்டுங்க"

" இல்ல எனக்கு ஆட வராது " 

"இது நம்ம ஊரு இல்லை ,  ஹாப்பியா ஆடுங்க Please எனக்காக Please Please " 
 என அவள் கெஞ்ச அவன் " அட்ரா அட்ரா நாக்க முக்க"  பாட்டுக்கு ஆட தொடங்கினாள் நடுரோட்டில் .

 நிஜமாகவே அவனுக்கு ஆட வரவில்லை இருந்தாலும் இருவரும் அந்த Moment ஐ Enjoy செய்தனர் அவன் ஆடி முடித்ததும் அவள் பலமாக விழுந்து விழுந்து சிரித்தாள் . அவளுடன் சேர்ந்து இவனும் கூச்சப்படாமல் நன்கு சிரித்தான் . 

" இப்போ நீங்க ஒரு பாட்டுக்கு ஆடணும்"
 அவளோ Behoove பண்ணிக் கொண்டாள்  . பெண்களுக்கு இது இயல்பான விஷயம் தானே ? 

 இருந்தாலும் அவன் Convience செய்து ஒத்துக்க வைத்தான் .  பின்பு அவன் பாட்டு போட்டான் அவன் போட்ட பாட்டு " தில்லானா மோகனாம்பாள் " படத்திலிருந்து " நலம்தானா நலம்தானா " அதைக் கேட்டதும் அவள் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள் வெட்கத்தில் .

" Hey ! இந்த Song ah ? " 

" ஆமா " 

சிரித்தான் சரி என்று அவளும் ஆடத் தொடங்கினாள் அவளது ஆட்டமோ சும்மா சொல்லக்கூடாது மிக நன்றாக இருந்தது . அபிநயங்கள், பாவனைகளும் எல்லாம் நாட்டிய பேரொளி பத்மினியை ஒட்டியிருந்தது. 

" ஒருவேள இவள்  Classical Dancer oh ? "
 
என்ற கேள்வி அவனது மனதில் எழுந்தது அவ்வளவு அழகாக ஆடினாள். அவள் ஆடி முடித்ததும் இவன் கை தட்டினான் . அவள் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் . 

" Hey !  நீங்க நெஜமாவே Classical Dancer  ஆ ? " 

" Complete Classical Dancer னு சொல்லமுடியாது School Days ல class போனேன் இப்ப ரொம்ப years கழிச்சு திரும்ப ஆடுறேன் " 

 அவன் அவள் பேசுவதில் பூரிப்படைந்தான் இருவரும் அந்த தருணத்தை மிகவும் ரசித்தார்கள் . 

இப்போது இருவரும் நடக்க தொடங்கினார்கள் 10 நிமிடம் களித்து ஒரு இடம் வந்தது , ஒரு தெருவிளக்கு . 3 வழி சாலை அது .

இருவரும் பேசினார்கள் .
" Thanks for the day " என்றால் அவள் .

 அவள் சிரித்தாள் பின்பு இருவரும் ஒரு HUG செய்து விட்டு அந்த 3 வழி ரோட்டில் இடதுபுறம் அவளும் . வலதுபுறம் அவனும் பிரிந்து சென்றார்கள் . 

இதில் அழகு என்னவென்றால் இருவரும் ஒருவரின் பெயரை ஒருவர் கூட கேட்கவில்லை . Phone number வாங்கி கொள்ளவில்லை , சமூக வலைதளங்களின் id மாற்றி கொள்ளவில்லை.  இருவரும் அவர்களுக்கான அந்த நாளை நன்கு ரசித்து . அந்த தருணத்தை நன்கு வாழ்ந்தார்கள் . 

நமது heroine ன் வாழ்க்கை ஒரு அளவுக்கு நன்றாகத் தான் செல்லும் .

 ஆனால் நமது hero க்கோ அந்த நாள்  ரொம்பவே special . எப்போதும் வேலை , தனிமை , வேலை , தனிமை என்று தான் போகும் . 

திடிரென்று 2000களில் வந்த ரஹ்மான் பாடல்களை போல் fresh ஆக அவனை அந்த நாள் மாற்றியது .  

     

Sunday, 3 January 2021

20 வயது முதல் 25 வயது வரை

20 வயது முதல் 25 வயது வரை . 

இந்த பருவம் பெரும்பாலும் ஆண்களுக்கு , அழகிய கடினமான பருவம் என்று நினைக்குறேன் . 

இந்த பருவத்தில் தான் , ஆண்கள் . பையனிலினருந்து ஆண்மகனாக மாறும் பருவம் . 

இதை எழுதும் எனக்கு வயது 21 . 

இந்த கட்டுரை பெரும்பாலும் , வசதி படைத்த குடும்ப ஆண்களுக்கு ஒத்து போகாது . நடுத்தர குடும்ப ஆண்களுக்கான , ஆண்களிடம் இருந்து கிடைத்த பதிவு இது . 

இதில் எனது அனுபவம் மற்றுமல்லாமல் , எனது நண்பர்களின் அனுபவங்களையும் சிலவற்றை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் , பொதுவாக குறிப்பிட்டிருப்பேன் . 

20 முதல் 25 வரை . 

இந்த பருவம் தான் , நாம் வேலை தேடும் பருவமாக இருக்கிறது . தேடி , திரிந்து அலைந்து எப்படியாவது ஒரு வேலையில் உட்கார்ந்து விடுகிறோம் . 

வேலை சேரும் போது , அப்பிடியே படி படியா ... வீடு , வாசல் வாங்கும் கனவு . 25 வயதில் தங்களது 20,000 ரூபாய் , 30,000 வேலையை தக்க வைத்து கொண்டால் போதும் என்பது போல் பலருக்கு ஆகி விடுகிறது . 

காரணம் குடும்ப சூழல் . Risk எடுத்து தோற்றுவிட்டால் நம்மை நம்பிய குடும்பம் வறுமையில் வாடும் என்பதன் பயம் . 

பின்பு தங்கள் வாழ்நாளின் கடைசி வரை அந்த 20,000 முதல் 30,000 சம்பலத்திற்குள் . நமக்கு பிடித்த விஷயம் ஒன்று கூட விரும்பி செய்ய முடியாமல் அடக்கி கொண்டு வாழ்கிறார்கள் பலர்  . 

இதில் சிலர் , அந்த 30,000 சம்பளத்தில் வயிற்றை கட்டி , வாயை கட்டி . சிறியதாக EMI ல் வீடு  வாங்கி தங்கள் வாழ்நாள் முழுவதும் EMI கட்டுவதிலேயே கழித்து விடுகின்றனர் . 

அதற்காக தங்கள் , கனவை , ஆசையை , காதலை தொலைத்த இளைஞர்கள் எத்தனை பேர் . 

இந்த பருவத்தில் தான் . நம் காதலை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது . 

Teenageல் வந்தாலும் . இந்த பருவத்தில் தான் ஒரு maturity ல் வாழ்க்கைக்கான சிந்தனைகளுடன் காதலிக்க இயல்கிறது . 

பெரும்பாலும் time pass காதலாக போனாலும். பெரும்பாலும் உண்மை காதல்களும் இருக்கத்தான் செய்கிறது . 

அதில் சிலரே காதலை கரம் பிடிக்கின்றனர் . 

பலர் போராட முடியாமல் . வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் , status காரணத்தால் , ஜாதி மத பிரிவின் காரணத்தால் . தங்களின் காதலை மனதில் மட்டும் சுமந்து வாழ்கின்றனர் . 

இதில் கொடுமை என்ன வென்றால் . இளைஞர் கல்லூரி முடித்ததும் . அவர்களது காதலிக்கு திருமணம் ஆகி விடுகிறது . 

இவன் வேலை தேடி திரியும் சமயம் அவளுக்கு குழந்தையே பிறந்து விடுகிறது . பெரும்பலும் இப்படி தான் . ஆனால் சில இடங்களில் . தங்களின் காதலிக்கு 30 வயது ஆன பின்னும் திருமணம் ஆகாமல் தானும் அவளை கரம் பிடிக்க இயலாமல் . அவன் படும் பாடு மிக வலி மிக்கது . 

இதில் இந்த 20 முதல் 25 வயது . பருவ ஆண்கள் பலருக்கு அந்த சேரா காதலே கனவாக தான் இருக்கும் . ஒருதலை ராகமகே போய் விடும் அவர்களின் காதல் . 

பெண்களை பற்றி பேசும் போது . அக்கா , தங்கையுடன் பிறந்த நடுத்தர குடும்ப ஆண்களுக்கு பொறுப்பு இன்னும் கூடுதலாக இருக்கிறது . அண்ணன் , தம்பியுடன் பிறந்த ஆண்களை காட்டிலும் . 

அவர்களை கரை சேர்க்க , இவன் எதிர் நீச்சல் போடும் கட்டாயம் வந்து விடுகிறது . அதற்காக தங்களின் கனவை துளைத்தவர்கள் எத்தனை பேர் . 

இதில் பெரும் துயரம் , அப்பா , அம்மா சிலருக்கு இருவரும் இல்லாத நிலையில் . உடன்பிறந்த அக்கா , தங்கை இருக்கும் ஆண்கள் . 

அவர்கள் அவர்களின் சகோதரிகளுக்கு கூட திருமணம் செய்து முடித்தாலும் . அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் பாடு பெரும் பாடு . 

இது அனைத்தையும் face பண்ணி . ஒருவன் நல்ல நிலைமையில் பெரிய ஆளாக வரும் ஆண்களும் சிலர் இருக்கின்றனர் . ஆனால் அவர்கள் அந்த நிலைமைக்கு வருவதற்குள் இந்த சமூகம் அவர்களை போட்டு ஒரு வழி பணி விடும் . 

இதை 99% பணக்கார வீட்டு பசங்க உணரது கஷ்டம் . 

வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பத்து ஆண்களின் இரவுகள் நீண்டவை . கொடூரமானவை . அவர்களின் எண்ணங்களே அவர்களை ஒரு வழி செய்யும் . 

இது அனைத்தும் தாங்கி . கல்லில் இருந்து உருவாகும் சிலை போல . சிலர் ஜெய்கிறார்கள் . பலர் அடியை தாங்காத கல் போல உடைகிறார்கள் . 

அதில் நம்முடன் படித்த சிலர் , settle ஆகி விடுவார்கள் . அதை பார்த்து சில ஆண்கள் படும் ஏக்கம் . அருகில் இருந்து அவர்களை பார்த்தால் தான் உணர முடியும் .

நகையாக சொல்ல வேண்டும் என்றால் . இத்தனையும் கடந்து அவனுக்கு கல்யாணம் பண்ணும் நிலை வரும் போது . இந்த முடி கொட்டுகிற பிரேச்சனை பெரும் தலைவலி . கல்யாணத்திற்கு முன் வழுக்கை ஆன ஆண்களின் துயரம் . சொல்ல முடியாதது . 

இதை அனைத்தும் இளம் வயதில் சந்திக்கும் அனைத்து ஆண்களும் புத்தரை விட மேல் ஆனவர்களாக நான் கருதுகிறேன் . 

இந்த 25 வயது தாண்டிய பின்னரே பலரால் ஒரு நடுநிலைக்கு வர இயல்கிறது .

20 முதல் 25 வயது .
ஒரு கல் , சிலையாகும் பருவம் . 

~ அரவிந்த் மாணிக்கம் 
     04.01.2021
     காலை - 6.52